Skip to content

சில பக்கங்கள், பல மொழிகள்

சில பக்கங்கள், பல மொழிகள்

ஜனவரி 2013 முதல், விழித்தெழு! இதழும் காவற்கோபுர பொது இதழும் 32 பக்கங்களிலிருந்து 16 பக்கங்களாக குறைக்கப்படும்.

குறைவான பக்கங்களே இருப்பதால் மொழிபெயர்ப்பு குழுக்களால் பல மொழிகளில் மொழிபெயர்க்க முடியும். உதாரணத்திற்கு, டிசம்பர் 2012 விழித்தெழு! பத்திரிகை 84 மொழிகளிலும் டிசம்பர் 2012 காவற்கோபுர பத்திரிகை 195 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால், ஜனவரி 2013 முதல், விழித்தெழு! 98 மொழிகளிலும் காவற்கோபுரம் 204 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகிறது.

காவற்கோபுர படிப்பு இதழ் 32 பக்கங்களாகவே தொடர்ந்து வெளிவரும்.

அச்சடிப்பில் சில பக்கங்கள்—வெப்பில் பல பக்கங்கள்

பத்திரிகையில் செய்யப்படும் இந்த மாற்றம் நம்முடைய www.pr418.com வெப்சைட்டை இரண்டு விதங்களில் பாதிக்கும்.

  1. பத்திரிகையில் வந்த சில கட்டுரைகள் இனிமேல் வெப்சைட்டில் மட்டும்தான் வரும். உதாரணத்திற்கு, காவற்கோபுர பொது இதழில் வந்த “இளம் வாசகருக்கு,” “பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்,” கிலியட் பட்டமளிப்பு விழா அறிக்கை ஆகியவை இனிமேல் வெப்சைட்டில்தான் வரும். விழித்தெழு!-வில் வெளிவந்த “குடும்பமாகச் சிந்திக்க...” “இளைஞர் கேட்கின்றனர்” என்ற கட்டுரைகளும் இனிமேல் ஆன்லைனில் மட்டும்தான் வரும்.

  2. காவற்கோபுரமும் விழித்தெழு!-வும் எலக்ட்ரானிக் ஃபார்மேட்டிலும் வரும். பல வருடங்களாக காவற்கோபுரமும் விழித்தெழு!-வும் PDF ஃபார்மேட்டில் www.pr418.com வெப்சைட்டில் வந்துகொண்டிருக்கிறது. இனிமேல் இந்த பத்திரிகைகள் HTML ஃபார்மேட்டிலும் கிடைக்கும். அதனால் கம்ப்யூட்டரிலோ மொபைலிலோ டவுன்லோடு செய்து படிப்பதற்கு வசதியாக இருக்கும். எங்களுடைய மற்ற பிரசுரங்களையும் உங்களால் சுலபமாக டவுன்லோடு செய்து படிக்க முடியும். அவை சுமார் 400 மொழிகளில் ஆன்லைனில் கிடைக்கின்றன.