ஆயிரமாயிரம் பேர் வாசிக்க, எழுத கற்றுக்கொள்கிறார்கள்
2011-ல் யெகோவாவின் சாட்சிகள் 5,700-க்கும் அதிகமான மக்களுக்கு எழுத படிக்க கற்றுக்கொடுத்திருக்கிறார்கள்.
கானா:
கடந்த 25 வருடங்களில், 9,000-க்கும் அதிகமான ஆட்களுக்கு எழுத படிக்க உதவி செய்திருக்கிறோம்.
ஜாம்பியா:
2002 முதல் கிட்டத்தட்ட 12,000 பேர் எழுத படிக்கும் திறமையை வளர்த்திருக்கிறார்கள். 82 வயது ஆக்னஸ் இப்படி சொல்கிறார்: “எழுத படிக்க ஆசைப்படுறவங்களுக்காக கிளாஸ் நடத்தப்போறோம்னு சபையில அறிவிப்பு செஞ்சப்போ, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. உடனே என் பெயரை கொடுத்தேன். முதல் வகுப்புல என்னோட பெயரை எழுத கத்துக்கிட்டேன்!”
பெரு:
55 வயது மாணவர் இப்படி எழுதினார்: “நான் எழுத படிக்க கற்றுக்கொள்வேன் என்று கனவில்கூட நினைக்கவில்லை. ஏனென்றால், என்னுடைய அப்பா அம்மா என்னை ஸ்கூலுக்கு அனுப்பினதே இல்லை.
”
மொசாம்பிக்:
கடந்த 19 ஆண்டுகளில், 19,000-க்கும் அதிகமான மக்கள் வாசிக்க பழகிக்கொண்டார்கள். ஃபெலிசார்டா என்ற மாணவர் இப்படி சொன்னார்: “இப்போ என்னால பைபிள் வசனங்களை கண்டுபிடிச்சி மத்தவங்களுக்கு வாசிச்சு காட்ட முடியுது. முன்னாடி என்னால இப்படி செய்ய முடியாது, ஆனா இப்போ முடியுது. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.
”
சாலமன் தீவுகள்:
எங்கள் கிளை அலுவலகம் இப்படி எழுதியது: “முன்பெல்லாம் ஒதுக்குப்புறமான இடங்களில் குடியிருக்கிற நிறைய பேரால் பள்ளிக்கு போக முடியாமல் இருந்தது. சில பிள்ளைகளுக்கு மட்டும்தான் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது, எழுத படிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகள் நடத்தப்படுவதால் பெரியவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த வகுப்பில் படித்ததற்கு பிறகு நிறைய பேருக்கு தங்கள்மீது நம்பிக்கை வந்திருக்கிறது.
”