பெத்தேலைச் சுற்றிப் பார்க்க
எங்களது கிளை அலுவலகங்களை சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம், அவற்றை நாங்கள் பெத்தேல் என்று அழைக்கிறோம். எங்களுடைய சில கிளை அலுவலகங்களில் எந்த வழிகாட்டியும் இல்லாமல் சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் கண்காட்சியும் இருக்கிறது.
பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு மறுபடியும் தொடக்கம்: நிறைய நாடுகளில் பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு ஜுன் 1, 2023 முதல் மறுபடியும் தொடங்கியது. இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள நீங்கள் சுற்றிப் பார்க்க விரும்பும் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்தாலோ சளி, காய்ச்சல் இருந்தாலோ அல்லது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை சமீபத்தில் நீங்கள் சந்தித்திருந்தாலோ தயவுசெய்து சுற்றிப் பார்க்க வர வேண்டாம்.
ஐக்கிய மாகாணங்கள்
இந்தப் பக்கத்தில்
சுற்றிப் பார்ப்பதற்கான தகவல்கள்
முன்பதிவு—20-க்கும் குறைவான பார்வையாளர்கள்
முன்பதிவு—20 அல்லது அதற்கும் அதிகமான பார்வையாளர்கள்
முன்பதிவு விவரங்களைப் பார்க்க அல்லது மாற்ற
பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்—வார்விக்
பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்—பேட்டர்சன்
பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்—வால்கில்
கண்காட்சி
வார்விக்கில் இருக்கும் சுய வழிகாட்டி கண்காட்சி
பைபிளும் கடவுளுடைய பெயரும். இந்தக் கண்காட்சியில் சில அரிய பைபிள்களைப் பார்க்கலாம். அதோடு, கடவுளுடைய பெயரை பைபிளிலிருந்து நீக்குவதற்கு நிறைய முயற்சிகள் செய்யப்பட்டிருந்தாலும், அது எப்படி இன்றுவரை பைபிளில் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ளலாம். இந்தக் கண்காட்சியில் இருக்கும் கேலரியில், சில அரிய பைபிள்களும், பைபிள் சம்பந்தமான கலைப்பொருள்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை அடிக்கடி மாற்றப்படும்.
யெகோவாவுடைய பெயருக்கென்று ஒரு மக்கள். இந்தக் கண்காட்சி யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரத்தை விளக்குகிறது. யெகோவா தன்னுடைய விருப்பத்தைச் செய்ய தன் மக்களை எப்படிப் படிப்படியாக வழிநடத்தியிருக்கிறார், ஒழுங்குபடுத்தியிருக்கிறார், அவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்பதை இந்தக் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிற கலைப்பொருள்கள், படங்கள், வாழ்க்கை சரிதைகள் ஆகியவை விளக்கும்.
உலகத் தலைமை அலுவலகம்—விசுவாசம் செயலில். இந்த ஊடாடும் கண்காட்சி (Interactive Exhibit) ஆளும் குழுவின் பல்வேறு குழுக்கள் செய்யும் வேலையை விளக்கும். அதோடு, பைபிள் சொல்வதுபோல் ஒன்றுகூடி வரவும், சீஷர்களை உருவாக்கவும், கடவுளைப் பற்றிக் கற்றுக்கொள்ளவும், ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டவும் இந்தக் குழுக்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு எப்படி உதவி செய்கின்றன என்பதையும் விளக்கும்.
பேட்டர்சனில் இருக்கும் சுய வழிகாட்டி கண்காட்சி
முதல் நூற்றாண்டு பைபிள் கிராமம். இயேசு பூமியில் வாழ்ந்த சமயத்தில் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பைபிள் கிராமத்தில் அதை நீங்கள் பார்க்கலாம். அதோடு, முதல் நூற்றாண்டில் இருந்த கிராமத்தில் தினமும் மக்கள் செய்த வேலைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம், அந்த வேலைகளை நீங்கள் செய்துபார்க்கவும் முடியும். பைபிளை இன்னும் சுவாரஸ்யமாக படிக்க இந்தக் கண்காட்சி உங்களுக்கு உதவும்.
முதல் நூற்றாண்டு பைபிள் நாணயங்கள். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் முதல் நூற்றாண்டில் இருந்த நாணயங்கள் சிலவற்றை இந்தக் கண்காட்சியில் பார்க்கலாம். ஒவ்வொரு நாணயத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் பைபிள் பதிவுகளோடு அவை எப்படி ஒத்துப்போகின்றன என்பதைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
“உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்.” நம்முடைய அமைப்பில் நடத்தப்படும் பள்ளிகள், பயிற்சி வகுப்புகள் பற்றிய சரித்திரத்தை இந்தக் கண்காட்சியில் பார்க்கலாம். மனப்பூர்வமாக சேவை செய்யும் வாலண்டியர்கள் திறமையான போதகர்களாகவும் சபை மூப்பர்களாகவும் ஆவதற்கு இந்தப் பள்ளிகள் எப்படி உதவுகின்றன என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள்.
“நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற முயற்சி செய்வது.” பயங்கரமான எதிர்ப்பு வந்தபோதும், தங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்காத யெகோவாவின் சாட்சிகளுடைய மனதைத் தொடும் அனுபவங்கள் இந்தக் கண்காட்சியில் காட்டப்படும். உலகம் முழுவதும் நாம் செய்யும் ஊழிய வேலைக்கு சட்டப்பூர்வ உரிமையைப் பெற நம்முடைய அமைப்பு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்றும் பாருங்கள்.