Skip to content

பெத்தேலைச் சுற்றிப் பார்க்க

எங்களது கிளை அலுவலகங்களை சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம், அவற்றை நாங்கள் பெத்தேல் என்று அழைக்கிறோம். எங்களுடைய சில கிளை அலுவலகங்களில் எந்த வழிகாட்டியும் இல்லாமல் சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் கண்காட்சியும் இருக்கிறது.

பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு மறுபடியும் தொடக்கம்: நிறைய நாடுகளில் பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு ஜுன் 1, 2023 முதல் மறுபடியும் தொடங்கியது. இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள நீங்கள் சுற்றிப் பார்க்க விரும்பும் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்தாலோ சளி, காய்ச்சல் இருந்தாலோ அல்லது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை சமீபத்தில் நீங்கள் சந்தித்திருந்தாலோ தயவுசெய்து சுற்றிப் பார்க்க வர வேண்டாம்.

தென் ஆப்பிரிக்கா

சுற்றிப் பார்ப்பதற்கான தகவல்கள்

சுற்றிப் பார்ப்பதற்கு முன்பதிவு செய்ய வேண்டுமா? ஆம். சுற்றிப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருந்தாலும் சரி, முன்பதிவு செய்யும்படி அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம். அப்போதுதான், கூட்டம் அதிகமாகிவிடாமல் பார்த்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும். அதோடு, சுற்றிப் பார்க்க வந்திருக்கும் எல்லாரும் முழு நன்மை அடைய முடியும். குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாவது முன்பதிவு செய்யுங்கள். விடுமுறை நாட்களில் சுற்றிப் பார்ப்பதற்கு, இன்னும் முன்னதாகவே முன்பதிவு செய்வது நல்லது.

முன்பதிவு செய்யாமலேயே நீங்கள் சுற்றிப் பார்க்க வரலாமா? நீங்கள் முன்பதிவு செய்யவில்லை என்றால், எங்களால் உங்களுக்கு பெத்தேலைச் சுற்றிக் காட்ட முடியாமல் போகலாம். இடவசதியின் காரணமாக, ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு ஆட்களுக்கு மட்டும்தான் எங்களால் சுற்றிக்காட்ட முடியும்.

சுற்றிப் பார்ப்பதற்கு எவ்வளவு நேரத்துக்கு முன்பாக நீங்கள் வர வேண்டும்? நீங்கள் முன்பதிவு செய்திருக்கும் நேரத்திலிருந்து ஒரு மணிநேரத்துக்கு முன்பு அங்கு இருந்தால் போதும். கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க இது உதவும்.

சுற்றிப் பார்க்க நீங்கள் எப்படி முன்பதிவு செய்யலாம்? “முன்பதிவு” என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

முன்பதிவில் மாற்றங்கள் செய்யவோ அதை ரத்து செய்யவோ முடியுமா? ஆம். “முன்பதிவு விவரங்களைப் பார்க்க அல்லது மாற்ற” என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு வேண்டிய நாட்களில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வது? அடிக்கடி வெப்சைட்டைப் பாருங்கள். யாராவது தங்களுடைய முன்பதிவில் மாற்றங்கள் செய்தாலோ அதை ரத்து செய்தாலோ, உங்களால் அந்த நாட்களில் முன்பதிவு செய்ய முடியும்.

முன்பதிவு

பார்வையாளர் சிற்றேட்டை டவுன்லோட் செய்யவும்

சுற்றிப் பார்க்க வருபவர்களின் பார்வைக்கு

பார்வையாளர் மையம்: பெத்தேலில் என்னென்ன வேலைகள் நடக்கின்றன என்பதையும், எங்களுடைய வணக்கத்தை பெத்தேல் எப்படியெல்லாம் ஆதரிக்கிறது என்பதையும் சிறப்பித்துக்காட்டும் வீடியோக்கள் காட்டப்படும்.

அச்சகம், பார்வையாளர் மையம் 2: பிரசுரங்களை உள்ளூர் மொழிகளில் மொழிபெயர்த்து அச்சடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி வீடியோக்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அச்சடிக்கும் இயந்திரங்களை மேல்தளத்திலிருந்து பார்க்க முடியும். உள்ளூர் மொழிகளில் கிடைக்கும் சில பைபிள்களில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஒரு பைபிள் கண்காட்சியில் பார்க்க முடியும்.

அச்சகம், பார்வையாளர் மையம் 3: அச்சடிக்கப்பட்ட பிரசுரங்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவது சம்பந்தமான வேலைகளை மேல்தளத்திலிருந்து பார்க்கலாம். பேக் செய்யப்பட்ட பிரசுரங்கள் எந்தெந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற தகவலை அங்கிருக்கும் டிஸ்ப்லேவில் பார்க்கலாம். இந்தத் தகவல் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். ராஜ்ய மன்ற கட்டுமான வேலைகளையும், பிரசுரங்களை வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவது சம்பந்தமான வேலைகளையும், ஆடியோ வீடியோ பிரசுரங்களைத் தயாரிப்பது சம்பந்தமான வேலைகளையும் பற்றிய வீடியோக்கள் காட்டப்படும்.

கூடுதலான தகவல்கள்: ஒரு பார்வையாளர் மையத்திலிருந்து இன்னொரு பார்வையாளர் மையத்துக்குப் போக பஸ் ஏற்பாடு செய்யப்படும். பார்வையாளர் ஓய்வு மையத்தில் பார்வையாளர்கள் அவர்கள் கொண்டுவரும் மதிய உணவைச் சாப்பிடலாம்.

முகவரி மற்றும் தொலைப்பேசி எண்

1 Robert Broom Drive East

Rangeview

KRUGERSDORP

1739

SOUTH AFRICA

+27 11-761-1002

வழி தெரிந்துகொள்ள