பெத்தேலைச் சுற்றிப் பார்க்க
எங்களது கிளை அலுவலகங்களை சுற்றிப் பார்க்க உங்களை அன்போடு அழைக்கிறோம், அவற்றை நாங்கள் பெத்தேல் என்று அழைக்கிறோம். எங்களுடைய சில கிளை அலுவலகங்களில் எந்த வழிகாட்டியும் இல்லாமல் சொந்தமாகச் சுற்றிப்பார்க்கும் கண்காட்சியும் இருக்கிறது.
பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு மறுபடியும் தொடக்கம்: நிறைய நாடுகளில் பெத்தேலைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஏற்பாடு ஜுன் 1, 2023 முதல் மறுபடியும் தொடங்கியது. இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள நீங்கள் சுற்றிப் பார்க்க விரும்பும் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ளுங்கள். உங்களுக்கு கோவிட்-19 தொற்று இருந்தாலோ சளி, காய்ச்சல் இருந்தாலோ அல்லது கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை சமீபத்தில் நீங்கள் சந்தித்திருந்தாலோ தயவுசெய்து சுற்றிப் பார்க்க வர வேண்டாம்.
பிரேசில்
சுற்றிப் பார்ப்பதற்கான தகவல்கள்
கண்காட்சிகள்
பைபிளும் அதன் நூலாசிரியரும். இந்த கண்காட்சி பைபிளின் நூலாசிரியரான யெகோவாவுக்கு மதிப்பும் மரியாதையும் சேர்க்கும். பைபிளின் முக்கிய பொருளான கடவுளுடைய அரசாங்கத்தை இது சிறப்பித்து காட்டும். பைபிள் எப்படி பல தாக்குதல்களை தாண்டி நம்முடைய நாள்வரை நிலைத்திருக்கிறது என்பதையும் எதிரிகள் பைபிளின் செய்தியை மற்ற முயற்சி செய்தபோதிலும் யெகோவா எப்படி அதை பாதுகாத்திருக்கிறார் என்பதையும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
”இது யெகோவாவின் ஊழியர்களுக்குக் கிடைக்கும் பெரிய ஆசீர்வாதம்.” பிரேசிலில் 120 வருஷங்களாக நடக்கும் பிரசங்க வேலையை யெகோவா எப்படி ஆசீர்வதித்திருக்கிறார் என்பதை இது காட்டும். எதிர்ப்பு மற்றும் துன்புறுத்தல் மத்தியிலும் பிரேசிலில் நம்முடைய வேலை எப்படி தொடங்கியது, தொடர்ந்து வளர்ந்தது என்பதை பற்றி சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில விஷயங்களை நீங்கள் பார்க்கலாம்.
முகவரி மற்றும் தொலைப்பேசி எண்