பாடல் 116
கருணை நம் பலமே!
-
1. விண்-மீன் சு-ட-ரும், பூ-வின் இ-த-ழும்
தே-வன் நீ-ரே தந்-தீர்.
வான் போல் வ-லி-மை, தாய் போல் க-ரு-ணை
உம்-மில் கண்-டோம் யெ-கோ-வா-வே!
-
2. பா-ரம் சு-மந்-து, உள்-ளம் உ-டைந்-து,
நொந்-து போ-னோர் எல்-லாம்,
பா-சம், க-ரு-ணை காட்-டும் ம-க-னை
ஏற்-றுக்-கொண்-டால் சோ-கம் தீ-ரும்.
-
3. பா-சம், க-ரு-ணை வாழ்-வின் ப-ல-மே,
நெஞ்-சில் நா-ளும் சேர்ப்-போம்;
தந்-தை அ-வ-ரின், பா-ச ம-க-னின்
பா-தம் காட்-டும் பா-தை செல்-வோம்.
(பாருங்கள்: மீ. 6:8; மத். 11:28-30; கொலோ. 3:12; 1 பே. 2:3.)