Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடல் 69

பிரசங்க வேலையில் முன்னேறி செல்வோம்!

பிரசங்க வேலையில் முன்னேறி செல்வோம்!

(2 தீமோத்தேயு 4:5)

  1. 1. தேவ ஆட்சியின் செய்தி சொல்வோம்,

    நாளும் முன்னேறி செல்வோம்.

    தாழ்மை உள்ளோரை சந்திப்போம் நாம்,

    வாழ்வின் வழியில் சேர்ப்போம்.

    உண்மை அன்புதான் காட்டுவோமே,

    மீட்கும் வேலை நம் உயிரே.

    தேவன் யெகோவா என்றுதானே,

    எல்லோருக்கும் நாம் சொல்வோமே.

    (பல்லவி)

    முன்னே செல்வோம், தைரியமாய்

    நாமும் நற்செய்தி சொல்வோம்.

    முன்னே நிற்போம், யெகோவாவின்

    உண்மை வீரனாய் நிற்போம்.

  2. 2. மந்தை ஒன்றுதான் என்றுதானே,

    சேர்ந்தே முன்னேறி செல்வோம்.

    மூத்தோர் இளையோர் என்று நாமே,

    வீடு வீடாக செல்வோம்.

    மக்கள் எல்லோரும் கேட்க வேண்டும்,

    தேவ ஆட்சியின் செய்தியே.

    தேவை இல்லையே பயம்தானே,

    தேவன் என்றும் நம் துணையே!

    (பல்லவி)

    முன்னே செல்வோம், தைரியமாய்

    நாமும் நற்செய்தி சொல்வோம்.

    முன்னே நிற்போம், யெகோவாவின்

    உண்மை வீரனாய் நிற்போம்.