பாடல் 84
தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை
-
1. மழைத் தூறல் மனதிலே,
மனம் அதில் நனையுதே.
தேவன் போட்ட பாதைகளில்,
பயணங்கள் தொடருதே.
(பல்லவி)
நம்மை நாம் தந்தோமே
தேவ சேவைக்கே!
எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம்
சேவை செய்வோமே!
-
2. அறுவடை ஏராளமே,
கைகொடுக்க நாம் போவாமா?
தொலைதூர வயலுக்கும்,
ஆர்வத்தோடே நாம் போவாமா?
(பல்லவி)
நம்மை நாம் தந்தோமே
தேவ சேவைக்கே!
எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம்
சேவை செய்வோமே!
-
3. அக்கம்பக்கம், சுற்றுமுற்றும்,
ஏந்தி செல்வோம் நல்ல செய்தி!
புது மொழி, புது வழி,
கற்றுக்கொண்டே சொல்வோம் செய்தி!
(பல்லவி)
நம்மை நாம் தந்தோமே
தேவ சேவைக்கே!
எங்கெல்லாம் தேவையோ அங்கெல்லாம்
சேவை செய்வோமே!
(பாருங்கள்: யோவா. 4:35; அப். 2:8; ரோ. 10:14.)