Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களை நம்பினேன்

உங்களை நம்பினேன்
  1. 1. இதயத்தில் விழுந்ததே

    நீர் தந்த வார்த்தையே.

    என் உள்ளத்திலே வேரூன்றி நிம்மதி தந்ததே.

    எந்த சூழ்நிலையிலும்

    உங்கள் வார்த்தை கை தரும்.

    விவேகமாய் நடந்திட வழியை காட்டும்.

    (பல்லவிக்கு முன்)

    நாளும் கலங்காமல்

    யெகோவா சொல்லை கேட்கிறேன்.

    (பல்லவி)

    துவண்டு நான் போனாலும்

    தந்தீர் பலம் வார்த்தையால்!

    நான் உங்களைத்தான் நம்பினேன் கன்மலைபோலே!

  2. 2. வலைவீசிடும் உலகம்,

    அலைபாய்ந்திடும் உள்ளம்.

    தள்ளாடிடும் நேரத்திலே துணை நீரே!

    உங்கள் வார்த்தைகளையே

    உள்ளத்தில் எழுதினேன்.

    தடுமாறும் வேளையிலே கரம் நீட்டினீரே!

    (பல்லவிக்கு முன்)

    கலங்காமல்

    யெகோவா சொல்லை கேட்கிறேன்.

    சோகங்கள் பறந்துபோய்விடும்

    நாளுக்காக காத்திருக்கின்றேன்.

    (பல்லவி)

    துவண்டு நான் போனாலும்

    தந்தீர் பலம் வார்த்தையால்!

    நான் உங்களைத்தான் நம்பினேன் கன்மலைபோலே...

    போலே!

    (பல்லவிக்கு முன்)

    நெஞ்சம் கலங்காமல்

    யெகோவா சொல்லை கேட்கிறேன்.

    சோகங்கள் பறந்துபோய்விடும்

    நாளுக்காக காத்திருக்கின்றேன்.

    (பல்லவி)

    துவண்டு நான் போனாலும்

    தந்தீர் பலம் வார்த்தையால்!

    நான் உங்களைத்தான் நம்பினேன் கன்மலை போலே!