Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உனக்காக நான் இருப்பேன்! 

உனக்காக நான் இருப்பேன்! 

டவுன்லோட்:

  1. 1. காற்று எப்போதும்

    நம் பக்கம் வீசுவதில்லை.

    கண்ணிமைக்கின்ற நேரத்தில் வாழ்க்கை

    தலைகீழாய் மாறிடலாம்.

    நம் வாழ்க்கை ஓர் கணம்

    இருண்டு போனாலும்கூட

    ஒளி ஏற்றியே, வழியை காட்டிட

    நம் தந்தை இருக்கின்றாரே.

    (பல்லவிக்கு முன்)

    தேவனின் கண்ணிலே

    நாம் ஒவ்வொருவரும் மின்னும் வைரமே!

    அன்பை காட்டுவதில்

    அவரை பின்பற்றுவோமே!

    (பல்லவி)

    என் நண்பனே, நீ கலங்காதே!

    சுக துக்கத்தில் சேர்ந்திருந்தாயே.

    உனக்காய்

    நான் இருப்பேனே என்றும்

    என் தோழனே.

    விட்டு பிரியாமல் உன்னோடிருப்பேன்.

  2. 2. ஓராயிரம் சொற்கள்

    சொல்லாத வலிகள் எல்லாம்,

    விழியோரம் வழிகின்ற கண்ணீரே

    மௌனமாய் சொல்லி விடுமே.

    (பல்லவிக்கு முன்)

    கண்ணீரில் மூழ்கினால்

    யெகோவா கை தந்து கரை சேர்ப்பாரே

    நாமும் மற்றவரின்

    கண்ணீர் துடைக்கும் கையாவோம்

    (பல்லவி)

    என் நண்பனே நீ கலங்காதே!

    சுக துக்கத்தில் சேர்ந்திருந்தாயே.

    உனக்காய்

    நான் இருப்பேனே என்றும்

    என் தோழனே.

    விட்டு பிரியாமல் உன்னோடிருப்பேன்.

    (பல்லவி)

    என் நண்பனே நீ கலங்காதே!

    சுக துக்கத்தில் சேர்ந்திருந்தாயே.

    உனக்காய்

    நான் இருப்பேனே என்றும்

    என் தோழனே.

    விட்டு பிரியாமல் உன்னோடிருப்பேன்.