Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உம் கைவண்ணம் கண்டு மகிழ்ந்தோம்!

உம் கைவண்ணம் கண்டு மகிழ்ந்தோம்!
  1. 1. உம் ராஜ்யத்தினாலே, பல கோடி நன்மைகள்.

    சத்யமும் வேத வார்த்தையும் தந்தீரே என் கையில்.

    உண்மையுள்ள அடிமையால் ப்ரகாசிக்கும் ஒளி!

    அன்பான மேய்ப்பர் உள்ளதால் நடந்தேன் உம் வழி!

    நெஞ்சில் ஆசை ஆயிரம் மாநாடு போகையில்.

    நான் மூன்று நாளும் நனைவேன் சந்தோஷ மழையில்!

    கூட்டங்களில் நான் கற்றதால் உம் வேலை செய்கிறேன்.

    அழகாய் சொல்லித் தந்தீரே உம் அன்பை உணர்ந்தேன்!

    (பல்லவி)

    உம் கைவண்ணம் கண்டு,

    எந்நாளும் மகிழ்ந்து நின்றோம்!

    ராஜ்யத்தின் ஆட்சியை

    பொன்னாக போற்றுகின்றோமே எங்கள் நெஞ்சத்திலே!

    என்றென்றும் வாழ ஏங்குகின்றோம் பூஞ்சோலையிலே!

  2. 2. எம்மை தேர்ந்தெடுத்தீர் சக வேலையாட்களாய்.

    ப்ரசங்க வேலை தந்தீர் செய்வோம் உள்ளப்பூர்வமாய்!

    சத்யத்தின் ஆழங்களை தெளிவாகவே கற்றோம்.

    வாழ்வின் வழி நடப்பதாலே நிம்மதி பெற்றோம்.

    உள்ளம் தூண்டிடும் ராஜ்ய பாடல்கள் கேட்கிறேன்.

    உம் சக்தி தந்தீரே குடும்ப வழிபாட்டிலே!

    வேற்றுமைகள் எல்லாம் மறந்து ஒன்றுசேர்கிறோம்!

    உலகில் எங்கும் இல்லாத அன்பை சுவைக்கிறோம்!

    (பல்லவி)

    உம் கைவண்ணம் கண்டு,

    எந்நாளும் மகிழ்ந்து நின்றோம்!

    ராஜ்யத்தின் ஆட்சியை

    பொன்னாக போற்றுகின்றோமே எங்கள் நெஞ்சத்திலே!

    என்றென்றும் வாழ ஏங்குகின்றோம் பூஞ்சோலையிலே!