உம் வார்த்தையால் நினைப்பூட்டினீர்!
டவுன்லோட்:
1. என்ன செய்வேன்? யாரை நான் கேட்பேன்?
நண்பராய் மகிழ்ந்திடும் நேரம் அல்லவா?
வேண்டாம் என்று சொல்லி நான் அதை தள்ளவா?
ஓ.... எந்த வழியில் போவேன்? எதில் நடப்பேன்?
என்ன செய்வேன்? யார் சொல்லைக் கேட்பேன்?
சூழ்ச்சியான கண்ணிகள் அங்கிருக்குமோ?
தேவனோடு என் உறவை முறிக்குமோ?
ஓ... வாடுதே என் மனமே. யெகோவா, கேட்பீர் ஜெபமே!
(பல்லவி)
உம் வார்த்தையினாலே நினைப்பூட்டினீரே!
அதில் நாளும் மூழ்கி முத்தெடுக்கின்றேனே!
உங்கள் வார்த்தையை கேட்போர்க்கு ஒவ்வொரு நாளுமே வெற்றிதான்!
2. என் தீர்மானங்களின் விளைவுகள் என்ன?
யார் மனதையாவது புண்படுத்துமோ?
இல்லை, என்னை ஆபத்தில் சிக்க வைக்குமோ?
தெளிவாய் வழி பார்க்கிறேன்—உங்கள் வார்த்தையாலே!
(பல்லவி)
உம் வார்த்தையினாலே நினைப்பூட்டினீரே!
தினந்தினம் உள்ளம் பலமடையுதே!
உங்கள் வார்த்தையை கேட்போர்க்கு ஒவ்வொரு நாளுமே வெற்றிதான்!
(பல்லவி)
உம் வார்த்தையினாலே நினைப்பூட்டினீரே!
தினந்தினம் உள்ளம் பலமடையுதே!
உங்கள் சக்தியால் சந்திப்பேன் எதையுமே!
வேத வார்த்தையால் வாழ்க்கையே மின்னிடுமே!
உங்கள் வார்த்தையை கேட்போர்க்கு ஒவ்வொரு நாளுமே வெற்றியே!