Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உள்ளது போதும்!

உள்ளது போதும்!

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. மின்னும் ஒவ்வொன்றும் பொன்னென்று,

    வாங்கிட சேர்த்திட மனம் ஏங்கும்.

    தேவையில்லாமலே சேர்ப்பது,

    கெளரவ கைதிகள் ஆக்கும்.

    (பல்லவி)

    வண்ணத்துப் பூச்சி,

    வாழ்க்கையில் பாரம் இல்லை,

    தேவைக்கு மேலும் ம்ம் தேடாது.

    உள்ளது போதும்,

    என்றெண்ணி வாழும் போது,

    உள்ளத்தில் பொங்கும் ம்ம் சந்தோஷம்.

  2. 2. அன்றாடம் உணவோடு,

    நாம் தங்க இடம் வேண்டும்.

    நம்மிடம் உள்ளவற்றை வைத்து நாம்,

    நிம்மதியாய் இன்று வாழ்வோம்.

    (பல்லவி)

    வண்ணத்துப் பூச்சி,

    வாழ்க்கையில் பாரம் இல்லை,

    தேவைக்கு மேலும் ம்ம் தேடாது.

    உள்ளது போதும்,

    என்றெண்ணி வாழும் போது,

    உள்ளத்தில் பொங்கும் ம்ம் சந்தோஷம்.

    (பிரிட்ஜ்)

    நாம் ஸ்வாசிக்கும் காற்றெல்லாம்,

    என்றைக்கேனும் தீர்ந்ததோ,

    தேவன் கைகள் சின்னதோ,

    நம்பிக்கை வைப்போமே நாம்.

    தேவை இல்லை பயம்.

  3. 3. வீணான பாரமெல்லாம் வேண்டாமே,

    வாழ்வோமே எளியதோர் வாழ்க்கை தான்.

    பொன்னான நம் நேரம் வேண்டாமோ?

    யெகோவா தேவனைத் தேட.

    (பல்லவி)

    வண்ணத்துப் பூச்சி,

    வாழ்க்கையில் பாரம் இல்லை,

    தேவைக்கு மேலும் ம்ம் தேடாது.

    உள்ளது போதும்,

    என்றெண்ணி வாழும் போது,

    உள்ளத்தில் பொங்கும் ம்ம் சந்தோஷம்.

    (பல்லவி)

    வண்ணத்துப் பூச்சி,

    வாழ்க்கையில் பாரம் இல்லை,

    தேவைக்கு மேலும் ம்ம் தேடாது.

    உள்ளது போதும்,

    என்றெண்ணி வாழும் போது,

    உள்ளத்தில் பொங்கும் ம்ம் சந்தோஷம்.