Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் வாழ்வைத் தந்துவிட்டேன்

என் வாழ்வைத் தந்துவிட்டேன்

டவுன்லோட்:

  • லீட்ஷீட்

  1. 1. என் தந்தை உங்கள் கையில் என் வாழ்வைத் தந்துவிட்டேன்.

    உயிருள்ள காலமெல்லாம் உம் அன்பில் நான் வாழ்கிறேன்.

    பிரசங்கிக்கும் வேலையில் சந்தோஷம் நான் காண்கிறேன்.

    நல் நெஞ்சங்களை உங்கள் வார்த்தையால் தேற்றுகிறேன்.

    (பல்லவிக்கு முன்)

    யெகோவா உங்கள் பேரை தினம்தினம் போற்றுவதால்

    எனக்குள்ளே விஸ்வாசம் நாளும் பலமாகுதே!

    (பல்லவி)

    என் தந்தையே உங்கள் புகழ் பாடுவேன்,

    எங்கே தேவையோ அங்கே சேவை செய்வேன்.

    என் உள்ளத்தை அன்பினால் ஈர்த்ததாலே

    யெகோவா என் ஜீவன் என்றென்றும் உங்களுக்கே!

  2. 2. தேவனின் சேவையில் எந்நாளும் சந்தோஷமே.

    அன்பு பாசத்தைக் காட்டினால் வரும் ஆனந்தமே.

    மனப்பூர்வமாய் உதவிக்கரம் நீட்டும்போது, 

    மனமெல்லாம் குளிர்ந்திடும் சந்தோஷ சாரலிலே.

    (பல்லவிக்கு முன்)

    யெகோவா உங்கள் பேரை தினம்தினம் போற்றுவதால்

    எனக்குள்ளே விஸ்வாசம் நாளும் பலமாகுதே!

    (பல்லவி)

    என் தந்தையே உங்கள் புகழ் பாடுவேன்,

    எங்கே தேவையோ அங்கே சேவை செய்வேன்.

    என் உள்ளத்தை அன்பினால் ஈர்த்ததாலே

    யெகோவா என் ஜீவன் என்றென்றும் உங்களுக்கே!

    (பல்லவி)

    என் தந்தையே உங்கள் புகழ் பாடுவேன்,

    எங்கே தேவையோ அங்கே சேவை செய்வேன்.

    என் உள்ளத்தை அன்பினால் ஈர்த்ததாலே

    யெகோவா என் ஜீவன் என்றென்றும் உங்களுக்கே!