Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எழுந்து நிற்பேன்!

எழுந்து நிற்பேன்!
  1. 1. ஓர் கூடில்லா புறாவைப் போல் அலைகிறேன்.

    யெகோவா, உணர்ந்தேன் என் தவறை.

    நொந்துபோன நெஞ்சம் கண்ணீரோடு கெஞ்சுதே.

    நான் கூடு திரும்ப ஏங்குகின்றேன்!

    (பல்லவி)

    நீங்கள் சொல்லித்தந்ததெல்லாம் நெஞ்சில் நிற்குதே!

    உம் வார்த்தைகள் காயத்தை ஆற்றுதே!

    நான் தடுமாறினாலும், விழுந்தாலுமே,

    எழுந்திடுவேன்!

  2. 2. என்னோடிருந்து பாசத்தை

    பொழிந்த நண்பர்கள்

    சேவை செய்கிறார்கள் உண்மையாய்.

    உம் வார்த்தை உள்ளதே கலங்கரை விளக்கமாய்!

    வந்திடுவேன் நான் வாழ்வின் பாதைக்கே!

    (பிரிட்ஜ்)

    என்னைச் சுற்றியே நடப்பதெல்லாம் உணர்த்துகின்றதே,

    முடிவு அண்மையில்!

    (பல்லவி)

    என் யெகோவா தந்தையே, ஜெபம் கேளுங்கள்!

    அநாதையாய் நிற்கின்றேன் வாருங்கள்!

    நான் ஏழுதரம் கீழே விழுந்தாலும்,

    எழுந்திடுவேன்!

    (பிரிட்ஜ்)

    அப்பா புரிந்துகொள்கிறார்! கை நீட்டி தூக்கிக்கொள்கிறார்!

    நான் செய்த நல்லதை யெகோவா மறப்பதில்லை.

    என் இதயத்தை பார்க்கிறார்!

    (பல்லவி)

    அதனால் திரும்பி போகின்றேன், என் தந்தையிடமே!

    அன்பு மழையில் நனைவேன்!

    நான் தடுமாறினாலும், விழுந்தாலுமே, எழுந்து நிற்பேன்!

    எழுந்து நிற்பேன்!