ஒன்றாய் நாம் பலமாய்!
டவுன்லோட்:
(ஆரம்பம்)
பாசமான பந்தங்களே
கொஞ்சம் இங்கே கேளுங்கள்!
1. யெகோவாவின் பேர் போற்றும்
இங்கே எல்லோரும் நம் சொந்தம் தான்.
தேசங்கள் வேறென்றாலும்
நாம் பேசும் அன்பின் மொழி ஒன்றுதான்.
(பல்லவிக்கு முன்)
கஷ்டம் வந்தாலும் விடாமல் என்றும்
துணை செல்லும் தோழர்கள் நாம்!
(பல்லவி)
ஒன்றாய் சேர்ந்து அன்பால் நாம் வேற்றுமை வென்றோம்,
யெகோவாவின் வேலையில் கைகள் கோர்க்கின்றோம்,
ஒன்றாக நாம் துன்பங்கள் தாண்டி செல்கின்றோம்.
சத்யம் தந்த நட்பில் நாம் எல்லோரும்
ஒன்றாக சேர்ந்தோமே!
2. மணம் வீசும் பூக்கள் போல்
பூமியெங்கும் நாம் பூக்கின்றோமே,
வண்ணங்கள் வேறென்றாலும்
பூங்கொத்தாய் சேர்த்தாரே நம் தேவனே.
(பல்லவிக்கு முன்)
நம் அன்பை போல எங்கேயும் இல்லை
நம் நட்புக்கு எல்லை இல்லை!
(பல்லவி)
ஒன்றாய் சேர்ந்து அன்பால் நாம் வேற்றுமை வென்றோம்,
யெகோவாவின் வேலையில் கைகள் கோர்க்கின்றோம்,
ஒன்றாக நாம் துன்பங்கள் தாண்டி செல்கின்றோம்.
சத்யம் தந்த நட்பில் நாம் எல்லோரும்
ஒன்றாக சேர்ந்தோமே!
சேர்ந்தே நாம் பலமாய் நிற்போமே!