ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்
1. உங்கள் உள்ளம் நல்ல உள்ளமே!
நல்லதை செய்யும் தங்க மனமே!
யோசிக்காமல் சொன்ன வார்த்தையாலே,
உண்மையே புரியாமலே,
நெஞ்சமே வெடித்ததே!
(பல்லவி)
சூரியன் தூங்கிடும் முன்னே
உள்ளங்கள் ஒன்றுசேர்ந்தால் என்ன?
சொன்ன வார்த்தை காற்றோடே
போனால்தான் என்ன?
ஒற்றுமையாய் சேர்ந்திருப்போம்!
2. மனதை வாட்டும் வார்த்தைகள் உண்டே.
கடும் சொல் நெஞ்சைப் பிளக்கும் அன்றோ?
காரணம் தெரிய வந்தாலே,
இதயம் இளகினாலே,
மன்னித்துவிடுவோமே!
(பல்லவி)
சூரியன் தூங்கிடும் முன்னே
உள்ளங்கள் ஒன்றுசேர்ந்தால் என்ன?
சொன்ன வார்த்தை காற்றோடே
போனால்தான் என்ன?
ஒற்றுமையாய் சேர்ந்திருப்போம்!
(பிரிட்ஜ்)
ஓர் செயல், ஓர் வார்த்தை நம் உறவையே முறித்துவிடுமே!
மன்னித்திடு, மறந்துவிடு!
நண்பராய் நாம் இருப்போமே!
(பல்லவி)
சூரியன் தூங்கிடும் முன்னே
உள்ளங்கள் ஒன்றுசேர்ந்தால் என்ன?
சொன்ன வார்த்தை காற்றோடே
போனால்தான் என்ன?
உன் இதயம் தூண்டிடவே
அன்புடனே மன்னித்து மறப்போமே!