ஓர் நொடி ஜெபம் செய்!
1. வாழ்க்கை ரோஜா பூ பாதை அல்ல!
சட்டென குத்துமே உன்னை முள்ளைப் போல!
துக்கம் மேகமாய் சூழ்ந்துகொண்டாலே,
பேசு உன் உள்ளத்திலே!
ஜெபத்திலே!
(பல்லவி)
தேவனை நம்பிடு!
சோர்வையே தள்ளிவிடு!
காப்பாரே கண்போலே!
ஓர் நொடி ஜெபித்தால்!
திக்கற்று நிற்கையில்,
வாடாதே! கரம் பிடிப்பார்!
வழி காட்டுவார்! நம்பிடு!
ஓர் நொடி ஜெபித்தால்!
அன்பு தேவனே!
வழி காட்டுவார்!
2. தினம் ஏதேதோ தொல்லைகள்தான்.
பணம் ஏதும் இல்லாமலே திண்டாட்டம்தான்.
ஆனால், சின்ன உதவி செய்தாலே,
மலரும் புன்னகையே!
புன்னகையே!
(பல்லவி)
பயமே வேண்டாமே!
தேவனை நம்பினாலே!
பாதையை காட்டுவார்!
ஓர் நொடி ஜெபித்தால்,
தருவார் பலமே!
தினமும் இணையில்லாத
துணை அவரே! நாளுமே
ஓர் நொடி ஜெபம் செய்!
அன்பு தேவனே
வழி காட்டுவார்!
(பல்லவி)
நம்பிடு யெகோவாவை!
நல்வழி காட்டுவார்!
ஓர் நொடி ஜெபம் செய்!
தருவார் பலமே!
ருசிப்பாய் இணையில்லாத
துணை அவரே! நாளுமே!
ஓர் நொடி ஜெபம் செய்!
நன்றி சொல்லிடு!
தினம் தினமே!