Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செல்ல மகள்!

செல்ல மகள்!
  1. 1. ரோஜாவாய் பூத்தாளே

    என் தோட்டத்தில்!

    அன்பென்னும் நீராலே,

    வளர்ந்தாள் இவள்!

    துன்பங்கள் வந்தாலும்,

    துணிந்து நின்றாள்.

    பூத்தது எந்தன் உள்ளம்!

    (பல்லவி)

    செல்ல பெண்ணே, பாச மலரே,

    நீதான் என்றும் என்னுயிரே!

  2. 2. த்யாகங்கள் செய்வது

    இவள் குணம்.

    அப்பாவின் சொல் கேட்டு,

    நடப்பாள் தினம்.

    அன்பாக தாங்குவார்,

    அரவணைப்பார்.

    நண்பராய் என்றும் இருப்பார்!

    (பல்லவி)

    செல்ல பெண்ணே, பாச மலரே,

    நீதான் என்றும் என்னுயிரே!

    (பிரிட்ஜ்)

    நம் யெகோவாவே

    உன்னைப் பார்க்கின்றார்.

    உந்தன் அன்பையே

    மறக்க மாட்டார்.

    செய்த த்யாகங்கள்

    அவர் நினைப்பார்,

    எந்நாளுமே!

    (பல்லவி)

    செல்ல பெண்ணே, பாச மலரே

    செல்ல பெண்ணே, கண்ணின் மணியே,

    உன்னைக் காப்பார், செல்ல மகளே,

    உயிர் நீதான், மகளே!