Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெயித்தேன் இன்று!

ஜெயித்தேன் இன்று!

டவுன்லோட்:

  1. 1. ஒவ்வொரு நாளும் தொல்லைதான்!

    ஏதேதோ சவால்கள்தான், நாளும் தொல்லைதான்!

    என்னென்ன நான் சமாளிப்பேன்?

    எப்படிச் சமாளிப்பேன், கவலையே இல்லை!

    என்னென்ன தொல்லை வந்தாலுமே,

    எப்படித்தான் வந்தாலுமே,

    நான் தயாராய் இருப்பேன்!

    சோதனையை சந்திப்பேன்!

    கஷ்டங்கள் என்ன வந்தாலும்,

    நான் ஜெபம் செய்திடுவேனே!

    (பல்லவி)

    ஜெயிப்பேன் நாளுமே

    யெகோவா துணையோடே!

    ஜெயிப்பேன் நாளுமே

    உண்மையாய் இருப்பேனே!

  2. 2. சோதனைகள் தொடரலாம்,

    கூட்டு சேர சொல்லலாம், சேர சொல்லலாம்!

    தப்புதான் செய்ய சொல்லலாம்,

    கட்டாயப்படுத்தலாம், நான் தப்பு செய்யத்தான்!

    எனக்கு வலை வீசலாமே!

    கூட வர சொல்லலாமே!

    ஞானமாய் நடப்பேனே!

    கூட்டுசேர மாட்டேனே!

    யெகோவாவுக்குச் சாட்சி நான்!

    தலைநிமிர்ந்து நிற்பேன் நான்!

    (பல்லவி)

    ஜெயித்தேனே இன்று

    யெகோவா துணையோடு!

    ஜெயித்தேனே இன்று

    உறுதியாய் நின்று!