தந்தையின் அன்புக்கு நன்றி
டவுன்லோட்:
லீட்ஷீட்
1. மலைகளில் பூக்கள்தான் தலையாட்டும்.
கதிர்களும் காற்றில் நாட்டியம் ஆடிடும்.
சூரியனும் காலை கண் விழிக்கும்.
வான் பறவைகள் பாட்டிசைக்கும்.
(பல்லவிக்கு முன்)
பெற்றேனே நான்
சந்தோஷம் எல்லாம்,
நான் என்ன செய்வேன்
தந்தையின் அன்புக்கே?
(பல்லவி)
நெஞ்சமே சொல் நன்றி,
நம் யெகோவாவுக்கே
நீ சொல் நன்றி!
தந்தையின் அன்பைத்தான்
பார், எங்கும் பார்,
கண்ணில் காண்கின்ற ஒவ்வொன்றும் நீ எண்ணிப் பார்.
யெகோவாவின் அன்பைப் பார், நீ சொல்
யெகோவாவே நன்றி,
என்றென்றும் நன்றி.
2. வண்ணங்கள் சேர்ந்து வானம்தான் மின்னிடும்.
நீங்கள் வரைந்த நீண்ட ஓவியம் ஆகாயம்.
இரவுகள் கேட்கும் நதியின் சத்தம்தான்.
விண்மீன் குளத்தில் வெண்ணிலா பூக்கும்.
(பல்லவிக்கு முன்)
பெற்றேனே நான்
சந்தோஷம் எல்லாம்,
நன்றி சொல்ல வேண்டும்
தந்தையின் அன்புக்கே!
(பல்லவி)
நெஞ்சமே சொல் நன்றி,
நம் யெகோவாவுக்கே
நீ சொல் நன்றி!
தந்தையின் அன்பைத்தான்
பார், எங்கும் பார்,
கண்ணில் காண்கின்ற ஒவ்வொன்றும் நீ எண்ணிப் பார்.
யெகோவாவின் அன்பைப் பார், நீ சொல்
யெகோவாவே நன்றி.
(பிரிட்ஜ்)
உம் சக்தி ஞானம் யெகோவா
நான் காண்கின்றதெல்லாமே
உம் பாசத்தாலே
நான் வாழ்கின்றேனே
நெஞ்சமே சொல் நன்றி
(பல்லவி)
நெஞ்சமே சொல் நன்றி,
நம் யெகோவாவுக்கே
நீ சொல் நன்றி!
தந்தையின் அன்பைத்தான்
பார், எங்கும் பார்,
கண்ணில் காண்கின்ற ஒவ்வொன்றும் நீ எண்ணிப் பார்.
யெகோவாவின் அன்பைப் பார், நீ சொல்
யெகோவாவே நன்றி,
யெகோவாவே நன்றி,
யெகோவாவே நன்றி.