தைரியமாகவும் உறுதியாகவும் இரு
டவுன்லோட்:
லீட்ஷீட்
1. விடியும்முன்
எழுகின்றாள்.
தேவனை நம்பினாள்.
புது நாளையே,
நம்பிக்கையோடே,
அப்பா கையில் கொடுப்பாள்.
இடியே விழுந்தாலும்
தடுமாறிட மாட்டாளே!
அந்த பாடலிலே
மனதை தினமும் தேற்றுவாள்.
(பல்லவி)
‘உன்னை தாங்குவேன்,
பயப்படாதே!
கண்ணுக்குள் வைத்து
உன்னை காப்பேனே!’
தைரியமாயிரு!
உறுதியாயிரு!
“உன்னை கைவிடாரே;
பலம் அளிப்பாரே!”
(பிரிட்ஜ்)
ஒவ்வொரு நாளுமே,
ஓய்வில்லாமலே,
தேனீயாய் வேலை செய்வாள்.
அன்பு நண்பர்கள்
அரவணைப்பதால்
கவலைகள் மறப்பாள்.
2. கழுகைப் போல்
உயரமாய்
சிறகை விரிப்பாள்.
பம்பரம் போலே
அவள் சுழல்வாளே.
மெழுகு போல் உருகுவாள்.
வலிகள் சுமந்தாலும்
ஜெபத்தில் உள்ளம் ஊற்றுவாள்.
அந்த பாடலிலே
மனதை தினமும் தேற்றுவாள்
(பல்லவி)
‘உன்னை தாங்குவேன்,
பயப்படாதே!
கண்ணுக்குள் வைத்து
உன்னை காப்பேனே!’
தைரியமாயிரு!
உறுதியாயிரு!
“உன்னை கைவிடாரே;
பலம் அளிப்பாரே!”
“உன்னை கைவிடாரே;
பலம் அளிப்பாரே!”