நல்ல நண்பர்களுடன் நானிருப்பேன்!
1. எல்லோருக்கும் நண்பருண்டு
ஒன்றுசேர்ந்து மகிழவே!
எனக்கென்றே எனக்காக
நல்ல நண்பர்கள் யாருண்டு?
குடும்பம்போல் அன்புடனே
ஆதரவு தந்திடவே!
உற்சாகத்தை ஊட்டிவிடும்
நண்பர் கூட்டம் இங்கேதானே!
(பல்லவி)
என் உள்ளம்தானே
அலைபாய்ந்தாலே,
யெகோவா நீரே
வழிகாட்டுமே!
நல்வழியைக் காட்டுமே!
2. பகல் நேர வானம் போல,
என் உள்ளம் தெளிவானதே!
உம் வார்த்தையைப் படித்தாலே,
உற்சாகம்தான் பிறக்குதே!
நல்ல நல்ல நண்பர்களே
எங்கேயோ அங்கிருப்பேனே!
இதுபோதும் என் வாழ்விலே!
யெகோவா தந்த பரிசே!
(பல்லவி)
என் உள்ளம்தானே
அலைபாய்ந்தாலே,
யெகோவா நீரே
வழிகாட்டுமே!
நல்வழியைக் காட்டுமே!