நாம் ஒரே குடும்பமே
டவுன்லோட்:
லீட்ஷீட்
1. மேகங்கள் வழி அனுப்ப,
அந்த வானம் பாதையாக,
பல ஆசைகள்,
எதிர்பார்ப்புகள்,
நெஞ்சில் ஏந்திச் செல்கிறோம்.
நல்ல செய்தியை சொல்லிடும் நாங்கள்
குடும்பம்போல் இணைந்தோம்.
இதயம் உருக்கும் இந்த பாசத்தையே
இங்கே நாம் காண்கிறோம்.
(பல்லவி)
பூமாலை பூக்கள் போல
யெகோவா நம்மை கோர்த்தாரே!
எங்கெங்கோ வாழும் நம்மையே
குடும்பம்
போல சேர்த்தாரே!
2. அன்போடே வரவேற்றதை
மறக்காதே எங்கள் நெஞ்சம்.
சொந்தபந்தம்போல் உணர்கின்றோமே,
எங்கள் பாசம் கூடுதே.
எங்கள் தேவன் யெகோவாவே உம்மால்
நாங்கள் ஒன்றாய் இணைந்தோம்.
அதனால், உம்மை என்றுமே நேசித்துப் போற்றி
நாங்கள் பாடுவோம்.
(பல்லவி)
பூமாலை பூக்கள் போல
யெகோவா நம்மை கோர்த்தாரே!
எங்கெங்கோ வாழும் நம்மையே
குடும்பம்
போல சேர்த்தாரே!
3. எந்திர பறவை மேலே
புது தேசம் காண வந்தோம்.
எங்கு சென்றாலும் நல்ல செய்தியை
சொல்ல வழி தேடுவோம்.
புது நண்பர்கள் அன்பில் நனைந்தோம்.
கவலைகள் மறந்தோம்.
இந்த பந்தம் நிலைத்திட, எல்லைகள் தாண்டி
அன்பை காட்டுவோம்.
(பிரிட்ஜ்)
பல்லாயிரம்
ஜனங்கள் வாழ்கிற இந்த பூமியில்,
சகோதர பாசத்தால்
இணைந்தோம் நாம் எல்லாமே.
(பல்லவி)
பூமாலை பூக்கள் போல
யெகோவா நம்மை கோர்த்தாரே!
எங்கெங்கோ வாழும் நம்மையே
குடும்பம்
போல சேர்த்தாரே!
நாம் வாழும் தேசம் வேறு,
யெகோவா நம்மை சேர்த்தாரே!
நாம் பேசும் பாஷைகள் நூறு,
அன்பாலே ஒன்றாக கோர்த்தாரே!
கென்யா, மலேஷ்யா, பிஜி, இந்தோனேஷ்யா,
ஜெர்மனி, ஜார்ஜியா, அன்கோலா
சைனா, ஜப்பான் என எங்கிருந்தாலும்,
அன்பாலே ஒன்று சேர்ந்தோமே!