Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பயப்படாதே!

பயப்படாதே!
  1. 1. உலகம் வீசும் வசீகர வலை.

    மனதோரமாய் சிறு ஆசை அலை.

    புயலாகவே துன்பங்கள்

    சுழன்றடித்தாலுமே

    தேவன் காப்பார்

    (பல்லவி)

    தேவன் துணையாய் இருக்கிறாரே!

    நீதியின் கரத்தால் தினம் தாங்குவார்!

    நம் கால்கள் தள்ளாடினால்,

    உள்ளங்கையிலே வைத்து தாங்குவார்.

    மனம் ஊற்றிவிடு!

    என்றும் பயம் வேண்டாமே!

  2. 2. அருமை நண்பர் தேவன் தந்தார்.

    அவர்கள் செய்யும் ஜெபம் ஈடில்லாததே.

    அவர் வார்த்தையை வாசித்தால்,

    சகித்திட சக்தி கிடைக்கும்.

    சோர்ந்தாலும் எழுவோம்.

    (பல்லவி)

    தேவன் துணையாய் இருக்கிறாரே!

    நீதியின் கரத்தால் தினம் தாங்குவார்!

    நம் கால்கள் தள்ளாடினால்,

    உள்ளங்கையிலே வைத்து தாங்குவார்.

    மனம் ஊற்றிவிடு நாளும்!

    (பிரிட்ஜ்)

    புயல் மேகங்கள் சூழ்ந்தாலுமே,

    அஞ்ச வேண்டாம்,

    நிமிர்ந்தே நிற்போம்!

    (பல்லவி)

    தேவன் துணையாய் இருக்கிறாரே!

    நீதியின் கரத்தால் தினம் தாங்குவார்!

    நம் கால்கள் தள்ளாடினால்,

    உள்ளங்கையிலே வைத்து தாங்குவார்.

    மனம் ஊற்றிவிடு!

    என்றும் பயம் வேண்டாமே!