மீண்டும் நண்பராவோம்!
டவுன்லோட்:
1. மனதோரம் ஓர் காயத்தை,
என்னுள் வைத்தே ரொம்ப நாளாய்,
விடாமல் நான் யோசிக்கிறேன்,
வதைக்கிறேன், என்னை நானே,
எனை நானே!
(பல்லவி)
மனதின் காயம் ஆறவே,
நல்வழியை காண்பேன் இன்றே!
அமைதியாய் பேசி தீர்ப்போம்.
மீண்டும் சேர்வோம். நண்பராவோம்!
2. தவறெல்லாம் மன்னித்தாலும்,
குறையெல்லாம் பொறுத்தாலும்,
அளவில்லா அன்பு காட்டும்
என் தேவனின் பேரன்புக்கு
ஈடில்லையே!
(பல்லவி)
மனதின் காயம் ஆறவே,
நல்வழியை காண்பேன் இன்றே!
அமைதியாய் பேசி தீர்ப்போம்.
மீண்டும் சேர்வோம். நண்பராவோம்!
(ப்ரிட்ஜ்)
மன்னிப்பேன் நானே!
தாமதிக்க மாட்டேனே நான்.
சோகங்கள் மறப்போம்,
சுகங்களை சுவைப்போமே!
3. எங்கள் நட்பு மலர்ந்தாலே,
யெகோவாவும் மகிழ்வாரே!
நடந்ததை மறந்தாலே,
எந்தன் நெஞ்சில் பாரம் இல்லை.
பாரம் இல்லை!
(பல்லவி)
மனதின் காயம் ஆறவே,
நல்வழியை காண்பேன் இன்றே!
அமைதியாய் பேசி தீர்ப்போம்.
மீண்டும் சேர்வோம். நண்பராவோம்!
மீண்டும் சேர்வோம். நண்பராவோம்!
மன்னிப்பேன் நானே!