Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்

யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்

(சங்கீதம் 96:8)

டவுன்லோட்:

  • லீட் ஷீட்

  1. 1. வான் எங்கும் ஆளும் யெகோவா,

    மாண்பில் மகா இறைவா!

    நான் தினம் ஏங்கிடும் தேவா,

    என் வாழ்க்கையே நீர் அல்லவா?

    பேரண்டம் பிரம்மாண்டம்  கண்டேன்

    பேருலகின் தலைவா!

    தூசியைப் போல் உள்ள என்னை

    நீர் பார்க்க நான் யார் இறைவா?

    (பல்லவி)

    யெகோவாவே, நான் உம்மைப் போற்றியே

    ஒரு பாடல் செய்தேனே.

    என் தேவன் நீர், என் ஜீவ ராகம் நீர்

    ஒளிவீசும் ராஜாவே,

    மகிமை நான் சேர்ப்பேனே.

  2. 2. நான் விடும் மூச்சினில் கூட

    தேவன் உம் பேர் புகழ்வேன்.

    ஊரெங்கும் நான் உம்மைப் போற்றி

    ஓர் காவியம் நான் வரைவேன்.

    வாழ்வினில் வேறென்ன வேண்டும்

    நான் உம்மை சேவிக்கிறேன்.

    ஆழ்கடல் நான் தினம் தாண்ட

    உம் பேரன்பை யாசிக்கிறேன்.

    (பல்லவி)

    யெகோவாவே, நான் உம்மைப் போற்றியே

    ஒரு பாடல் செய்தேனே.

    என் தேவன் நீர், என் ஜீவ ராகம் நீர்

    ஒளிவீசும் ராஜாவே,

    மகிமை நான் சேர்ப்பேனே.

  3. 3. தீச்சுடர் பூக்களும் விண்ணில்,

    பூச்சரமாய் தொங்குதே.

    தேய்பிறை வெண்ணிலா அங்கே,

    ஓர் ஓவியமாய் செல்லுதே.

    ஆகாயம் பூமியில் எங்கும்

    ஞானத்தை நான் காண்கின்றேன்.

    மாபெரும் ஆற்றலே உம்மை

    நான் போற்றியே வாழ்ந்திடுவேன்.

    (பல்லவி)

    யெகோவாவே, நான் உம்மைப் போற்றியே

    ஒரு பாடல் செய்தேனே.

    என் தேவன் நீர், என் ஜீவ ராகம் நீர்

    ஒளிவீசும் ராஜாவே,

    மகிமை நான் சேர்ப்பேனே.

(பாருங்கள்: சங். 96:1-10; 148:3, 7.)