Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

உக்ரைன் போரினால் தீவிரமடையும் உலகளாவிய உணவு நெருக்கடி!

உக்ரைன் போரினால் தீவிரமடையும் உலகளாவிய உணவு நெருக்கடி!

 மே 19, 2022 அன்று, 75-க்கும் அதிகமான உயர் அதிகாரிகள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இப்படிச் சொன்னார்கள்: “ஏற்கெனவே கோவிட்-19 பெருந்தொற்றினாலும் வானிலை மாற்றங்களாலும் உலகளாவிய உணவு நெருக்கடி உருவாகியிருக்கிறது. உக்ரைனில் நடக்கும் போரினால் இது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதனால் சில இடங்களில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.” அதன் பிறகு மே 21-ஆம் தேதி வெளியான தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை, “இந்த உலகம் ஏற்கெனவே பல பிரச்சினைகளால் திண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போரினால் நிலைமை இன்னும் மோசமாகப்போகிறது. ஏகப்பட்ட மக்கள் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கப்போகிறார்கள்” என்று சொன்னது. நாம் வாழும் இந்தக் காலத்தில் உணவு நெருக்கடி வரும் என்று பைபிள் ஏற்கெனவே சொல்லிவிட்டது. அதைச் சமாளிப்பதற்கு பைபிள் நமக்கு உதவியும் செய்கிறது.

உணவு நெருக்கடி வரும் என்று பைபிள் அன்றே சொல்லிவிட்டது

  •   ‘ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும் சண்டை போடும், அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்கள் . . . ஏற்படும்’ என்று இயேசு அன்றே சொல்லிவிட்டார்.—மத்தேயு 24:7.

  •    அடையாள அர்த்தமுள்ள நான்கு குதிரைவீரர்களைப் பற்றி பைபிளிலுள்ள வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. அதில் ஒரு குதிரைவீரன் போர்களுக்கு அடையாளமாக இருக்கிறான். அவனுக்குப் பிறகு வரும் குதிரைவீரன் பஞ்சத்துக்கு அடையாளமாக இருக்கிறான். அவன் வரும்போது உணவுக்குப் பயங்கரமான தட்டுப்பாடு இருக்கும், கிடைக்கிற கொஞ்சநஞ்ச உணவின் விலைகூட அநியாயத்துக்கு அதிகமாக இருக்கும். இதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒரு கறுப்புக் குதிரை வந்தது. அதன்மேல் உட்கார்ந்திருந்தவனின் கையில் ஒரு தராசு இருந்தது. பின்பு, . . . ஒரு குரல் வருவதுபோல் எனக்குக் கேட்டது; அது, ‘ஒரு தினாரியுவுக்கு [அதாவது, ஒரு நாள் கூலிக்கு] ஒரு படி கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கு மூன்று படி பார்லி’ . . . என்று சொன்னது.”—வெளிப்படுத்துதல் 6:5, 6.

 உணவு நெருக்கடி பற்றி பைபிள் சொன்ன இந்தத் தீர்க்கதரிசனங்கள் நம் காலத்தில் நிறைவேறிவருகின்றன. இந்தக் காலத்தைத்தான் ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1) ‘கடைசி நாட்களை’ பற்றியும், வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்லும் நான்கு குதிரைவீரர்களின் சவாரியைப் பற்றியும் இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்வதற்கு, 1914-லிருந்து உலகம் மாறிவிட்டது என்ற வீடியோவையும், “நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

பைபிள் எப்படி உதவும்?

  •    எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சமாளிப்பதற்குத் தேவையான நல்ல நல்ல ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. உணவுத் தட்டுப்பாட்டையும் விலைவாசி உயர்வையும் சமாளிப்பதற்குக்கூட அந்த ஆலோசனைகள் உதவுகின்றன. இதற்குச் சில உதாரணங்களை, “குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி?” என்ற கட்டுரையில் பாருங்கள்.

  •    இன்று இருக்கும் நிலைமை நல்லபடியாக மாறும் என்ற நம்பிக்கையையும் பைபிள் கொடுக்கிறது. ‘பூமியில் ஏராளமாகத் தானியம் விளைகிற’ ஒரு காலம் வரும் என்று அது சொல்கிறது. (சங்கீதம் 72:16) அப்போது, பசி-பட்டினியே இருக்காது, எல்லாருமே வயிறு நிறைய திருப்தியாகச் சாப்பிடுவார்கள். எதிர்காலம் சம்பந்தமாக பைபிள் தரும் நம்பிக்கையைப் பற்றியும், அதை நீங்கள் ஏன் நம்பலாம் என்பதைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “சந்தோஷப் பாதையில் செல்ல—நம்பிக்கை” என்ற கட்டுரையைப் பாருங்கள்.