Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

60 லட்சம் உயிர்களை சூறையாடிய கொரோனா—பைபிள் என்ன சொல்கிறது?

60 லட்சம் உயிர்களை சூறையாடிய கொரோனா—பைபிள் என்ன சொல்கிறது?

 உலக சுகாதார அமைப்பு (WHO) சொல்கிறபடி, மே 23, 2022 வரைக்கும் கிட்டத்தட்ட 62 லட்சம் பேர் கொரோனாவால் இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், இதைவிட அதிகமான மக்கள் இறந்து போயிருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு, மே 5, 2022 அன்று ஒரு செய்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. அதோடு, 2020-லிருந்து 2021-வரை “கொரோனா பெருந்தொற்றால் நேரடியாகவோ அல்லது அதோடு சம்பந்தப்பட்ட மற்ற காரணங்களாலோ . . . கிட்டத்தட்ட 1.5 கோடி பேர் இறந்து போயிருக்கிறார்கள்” என்றும் அது சொன்னது. மனதைப் பதற வைக்கும் இந்த மாதிரி சம்பவங்களைப் பற்றி பைபிள் ஏதாவது சொல்கிறதா?

உயிருக்கு உலைவைக்கும் கொள்ளைநோய்கள் வரும் என்று பைபிள் முன்பே சொன்னது

  •    இந்த “கடைசி நாட்களில்” வேகமாக பரவும் ‘கொள்ளைநோய்கள்’ வரும் என்று இயேசு முன்பாகவே சொல்லியிருந்தார்.—2 தீமோத்தேயு 3:1; லூக்கா 21:11.

 இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்கள் அதிகமாகத் தெரிந்துகொள்ள, ”உலக முடிவு எப்போது? இயேசு என்ன சொன்னார்?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

பைபிள் மனதுக்கு ஆறுதல் தருகிறது

  •    ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள் நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் ஆறுதல் தருகிறார்.’—2 கொரிந்தியர் 1:3, 4.

 நெருக்கமானவர்களைப் பறிகொடுத்தவர்களுக்கு பைபிளில் இருக்கும் விஷயங்கள் ஆறுதலாக இருந்திருக்கின்றன. அதிகமாகத் தெரிந்துகொள்ள, ”வேதனை குறைய—சில நல்ல ஆலோசனைகள்” என்ற கட்டுரையையும் “வேதனை மறைய வேதமே மருந்து” என்ற கட்டுரையையும் பாருங்கள்.

நிஜமான தீர்வை பைபிள் தருகிறது

  •    “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.”—மத்தேயு 6:10.

 “எனக்கு உடம்பு சரியில்லை” என்று சொல்லி யாருமே புலம்பாத ஒரு காலத்தை “கடவுளுடைய அரசாங்கம்” சீக்கிரமாகவே கொண்டுவரப்போகிறது. (ஏசாயா 33:24; மாற்கு 1:14, 15) பரலோகத்திலிருந்து செயல்படுகிற இந்த அரசாங்கத்தைப் பற்றியும் அது என்னவெல்லாம் சாதிக்கப்போகிறது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? என்ற வீடியோவைப் பாருங்கள்.

 நீங்களும் உங்கள் குடும்பமும் பைபிளைப் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம். பைபிளில் இருக்கிற ஞானமான ஆலோசனைகளும் நம்பிக்கை தருகிற வாக்குறுதிகளும் உங்களுக்குக் கண்டிப்பாக பிரயோஜனமாக இருக்கும்.