Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Comstock Images/Stockbyte via Getty Images

விசேஷ ஊழியம்

ஊழல் செய்யும் தலைவர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

ஊழல் செய்யும் தலைவர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?

 நம்பகமான ஒருவர் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஏனென்றால் ஊழல் செய்கிற தலைவர்களைப் பார்த்து அவர்கள் நொந்துபோயிருக்கிறார்கள். உலகம் முழுதும் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு 2023-ல் வெளியிடப்பட்டது. அரசியல் தலைவர்கள்மேல் மக்களுக்கு நம்பிக்கையே இல்லை என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. a

 ஊழல் செய்யாத... நம்பகமான... நேர்மையான... ஒரு தலைவர் ஆட்சி செய்யும் ஒரு அரசாங்கம் வரப்போவதாக பைபிள் சொல்கிறது. அதுதான் கடவுளுடைய அரசாங்கம். அதில் ஆட்சி செய்யப்போகும் தலைவர் இயேசு கிறிஸ்து.—ஏசாயா 9:7.

 மக்கள்மேல் உண்மையான அக்கறை இருப்பதை இயேசு ஏற்கெனவே நிரூபித்துக் காட்டியிருக்கிறார். (மத்தேயு 9:35, 36) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு ஆட்சி செய்யும்போது, யாரெல்லாம் அவருடைய ஆட்சியை ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்களுக்கு நியாயத்தையும் சமாதானத்தையும் கண்டிப்பாகத் தருவார்.—சங்கீதம் 72:12-14.

a 2023 Edelman Trust Barometer Global Report.