Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

kovop58/stock.adobe.com

விழிப்புடன் இருங்கள்!

ஒலிம்பிக்ஸ் உண்மையிலேயே உலகத்தை ஒன்றிணைக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?

ஒலிம்பிக்ஸ் உண்மையிலேயே உலகத்தை ஒன்றிணைக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?

 2024 ஒலிம்பிக் விளையாட்டுகளில், 206 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பதைக் கிட்டத்தட்ட 500 கோடி ஜனங்கள் பார்க்கிறார்கள். “உலக சமாதானத்துக்குக் கைகொடுக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நமக்கும் பங்கு கிடைத்திருக்கிறது” என்று சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக் சொன்னார். அதுமட்டுமல்ல, “என்னதான் வித்தியாசங்கள் இருந்தாலும் நாம் எல்லாருமே ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருக்க வேண்டும் என்ற ஒலிம்பிக்ஸின் லட்சியத்தை நாம் கௌரவப்படுத்த வேண்டும்” என்றும் சொன்னார்.

 இவ்வளவு உயர்ந்த லட்சியத்தை ஒலிம்பிக் விளையாட்டால் எட்ட முடியுமா? உண்மையான சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் வழி இருக்கிறதா?

சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவருமா?

 இந்த வருஷ ஒலிம்பிக்ஸை ஒரு விளையாட்டுப் போட்டியாக மட்டும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், மக்களுக்குள் பிரிவினைகளை உண்டாக்குகிற அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை அது உலகத்தின் பார்வைக்குக் கொண்டுவந்திருக்கிறது. உதாரணத்துக்கு, மனித உரிமைகள் பிரச்சினை, இனப்பாகுபாடு, மதப் பிரிவினைகள், ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சினைகளை அது வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

 ஒலிம்பிக்ஸ் மாதிரியான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் ஒரு பொழுதுபோக்காக இருப்பது உண்மைதான். ஆனால், இந்த மாதிரியான நிகழ்ச்சிகள் உண்மையான சமாதானத்தையும் ஒற்றுமையையும் கொண்டுவருவதற்குப் பதிலாக, மக்களுடைய மனதில் இருக்கிற பகையையும் அவர்கள் காட்டுகிற வெறுப்பையும் வெட்டவெளிச்சமாக்குகின்றன, அவற்றை இன்னும் அதிகமாகத் தூண்டியும்விடுகின்றன.

 நம்முடைய காலத்தில் ஒற்றுமையை எட்டிப் பிடிக்க முடியாத அளவுக்கு மக்களின் குணங்கள் மோசமாக இருக்கும் என்று பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) இதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “இன்று மக்கள் எப்படி இருப்பார்கள் என்று பைபிள் அன்றே சொன்னதா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

உலக சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் ஒரே வழி

 உலக சமாதானத்துக்கும் ஒற்றுமைக்கும் ஒரே வழிதான் இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. பரலோகத்தில் இருக்கிற ‘கடவுளுடைய அரசாங்கம்’ பூமியில் இருக்கிற எல்லா மக்களையும் ஒன்றிணைக்கும் என்று அது வாக்குக் கொடுக்கிறது.—லூக்கா 4:43; மத்தேயு 6:10.

 அந்த அரசாங்கத்தின் ராஜாவான இயேசு கிறிஸ்து, இந்த உலகத்தை ஒரு சமாதானப் பூங்காவாக மாற்றுவார். பைபிள் இப்படிச் சொல்கிறது:

  •    “நீதிமான்கள் செழிப்பார்கள். . . . மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:7.

  •    “ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். . . . கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:12, 14.

 இன்றைக்கும்கூட, 239 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஜனங்கள் இயேசு சொன்னபடி நடப்பதால் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதாவது, உலகம் முழுவதும் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துவின் வழியில் நடப்பதால் சமாதானமாக வாழ்கிறார்கள். எப்படி என்று தெரிந்துகொள்ள, “வெறுப்பு சங்கிலியை உடைத்து எறியுங்கள்” என்ற தலைப்பில் வந்த காவற்கோபுர பத்திரிகையைப் படித்துப் பாருங்கள்.