Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

காணாமல் போகும் கண்ணியம்—பைபிள் என்ன சொல்கிறது?

காணாமல் போகும் கண்ணியம்—பைபிள் என்ன சொல்கிறது?

 கண்ணியமான நடத்தை இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. சில நோயாளிகள் டாக்டர்களிடம் கோபமாக கத்துகிறார்கள், ஹோட்டலில் சாப்பிட வருகிற சிலர் சர்வர்களிடம் தரக்குறைவாக பேசுகிறார்கள், விமானத்தில் வரும் சில பயணிகள் பணியாளர்களிடம் காட்டுத்தனமாக நடக்கிறார்கள், பள்ளிகளில் சில முரட்டுப் பிள்ளைகள் தங்களுடைய ஆசிரியர்களை கேலி கிண்டல் செய்கிறார்கள், மிரட்டுகிறார்கள், ஏன் தாக்கவும் கூட செய்கிறார்கள். சில அரசியல்வாதிகள் மோசடிகளில் ஈடுபடுகிறார்கள், சிலரோ ‘நாங்கள் எல்லாம் ரொம்ப யோக்கியம்’ என்று பெருமையடித்துக்கொள்கிறார்கள்.

 கண்ணியமாக நடந்துகொள்வது எப்படி என்பதற்கு பைபிள்தான் சூப்பரான வழிகாட்டி! இன்றைக்கு ஏன் கண்ணியம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கும் அது பதில் கொடுக்கிறது.

கண்ணியம்—என்ன ஆனது?

 கண்ணியமான நடத்தை, அதாவது நல்ல நடத்தை... ஒழுக்கமான நடத்தை... விரும்பத்தக்க நடத்தை... உலகம் முழுவதும் தேய்பிறை போல் தேய்ந்துகொண்டே போகிறது.

  •    அமெரிக்காவில் கடந்த 22 வருடங்களைவிட இப்போது ஒழுக்கநெறிகள் அதலபாதாளத்துக்குள் போவதாக அங்கே சமீபத்தில் எடுத்த ஒரு கருத்துக்கணிப்பு காட்டியது.

  •    28 நாடுகளைச் சேர்ந்த 32, 000-க்கும் அதிகமான ஆட்களை வைத்து நடத்தப்பட்ட வேறொரு ஆய்வில், முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு இப்போது மக்கள் அநாகரிகமாக நடப்பதாக 65 சதவீதம் பேர் சொன்னார்கள்.

 இன்றைக்கு மக்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது.

  •    ‘இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். மக்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள்.’—2 தீமோத்தேயு 3:1-3, ERV.

 பைபிள் சொன்ன இந்த விஷயங்கள் இன்றைக்கு எப்படி நிறைவேறி வருகிறது என்பதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள “இன்று மக்கள் எப்படி இருப்பார்கள் என்று பைபிள் அன்றே சொன்னதா?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.

கண்ணியமான நடத்தைக்கு சூப்பரான வழிகாட்டி!

 கண்ணியம் தொலைந்துகொண்டிருக்கும் இந்த உலகத்தில், நல்ல நடத்தைக்கு பைபிள் நம்பகமான வழிகாட்டியாக இருப்பதாக லட்சக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். ஒழுக்க விஷயங்களில் பைபிள் தரும் ஆலோசனைகளை, “எப்போதுமே நம்பலாம்; இன்றும் என்றும் நம்பலாம்.” (சங்கீதம் 111:8) அதற்கு சில உதாரணங்கள் இதோ:

  •    பைபிள் என்ன சொல்கிறது: “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்.”—மத்தேயு 7:12.

     அர்த்தம்: மற்றவர்கள் நம்மை அன்பாக, மரியாதையாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிற மாதிரியே நாமும் மற்றவர்களை நடத்த வேண்டும்.

  •    பைபிள் என்ன சொல்கிறது: “நீங்கள் இப்போது பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்.”—எபேசியர் 4:25.

     அர்த்தம்: சொல்லிலும் செயலிலும் நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.

 இதைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைப் படியுங்கள்: