Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Surasak Suwanmake/Moment via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

2023 கோடைக்கால கொளுத்தும் வெயில்!—பைபிள் என்ன சொல்கிறது?

2023 கோடைக்கால கொளுத்தும் வெயில்!—பைபிள் என்ன சொல்கிறது?

 எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது வெயில் சுட்டெரிக்கிறது. பருவகால மாற்றங்களும் அதிகமாக இருக்கின்றன. அதைப் பற்றி சில அறிக்கைகளைப் பாருங்கள்:

  •    “மக்கள் வானிலை அறிக்கையைப் பதிவுசெய்ய ஆரம்பித்து 174 வருஷங்கள் ஆகிவிட்டன. இதுவரை பதிவுசெய்யப்பட்டதிலேயே இந்த ஜூன் மாதத்தில்தான் அதிகபட்ச வெயில் இருந்திருக்கிறது.”—தேசிய கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம், அமெரிக்க வர்த்தக துறை, ஜூலை 13, 2023.

  •    “இத்தாலி, ஸ்பெயின், பிரான்சு, ஜெர்மனி, போலந்து ஆகிய இடங்களில் கடுமையான வெப்பக்காற்று வீசுகிறது. அங்கிருக்கும் சிசிலி, சார்டீனியா தீவுகளில் வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸ் [118°F] வரைக்கும் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஐரோப்பாவில் இதுவரை பதிவானதிலேயே இதுதான் அதிகமான வெப்பநிலையாக இருக்கும்.”—ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ஜூலை 13, 2023.

  •    “பூமி சூடாகச் சூடாக, மழையும் கொட்டி தீர்க்க வாய்ப்பிருக்கிறது. அதுவும் அடிக்கடி அப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் மோசமான வெள்ளம் வரவும் வாய்ப்பிருக்கிறது.”—ஸ்டெஃபான் உலன்புருக், உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பின் நீரியல், நீர் மற்றும் பனிமண்டல துறை இயக்குனர், ஜூலை 17, 2023.

 வானிலை இப்படிச் சீரழிந்துகொண்டே வருவதைப் பற்றிய அறிக்கைகளைக் கேட்கும்போது உங்களுக்குப் பயமாக இருக்கிறதா? இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று இப்போது பார்க்கலாம்:

சீரழிந்துவரும் வானிலையைப் பற்றி பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறதா?

 ஆம். நம் காலத்தில் நடக்கும் சில சம்பவங்களைப் பற்றி பைபிள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது. பூமி முழுவதும் இருக்கிற வெப்பக்காற்றும், மற்ற வானிலை மாற்றங்களும் அந்தச் சம்பவங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றன. உதாரணமாக, “திகிலுண்டாக்கும் காட்சிகள்” அல்லது “பயங்கரமான தோற்றங்கள் தெரியும்” என்று இயேசு முன்பே சொல்லியிருக்கிறார். (லூக்கா 21:11, தமிழ் O. V.) அதிகமாகிவரும் வெப்பநிலையைப் பார்த்து, மனிதர்கள் இந்தப் பூமியை அழித்துவிடுவார்களோ என்ற திகில் அதாவது பயம் நம் எல்லாருக்குமே இருக்கிறது.

பூமி அழிந்துவிடுமா?

 அழியாது. நாம் என்றென்றும் வாழ்கிற மாதிரிதான் கடவுள் இந்தப் பூமியைப் படைத்திருக்கிறார். மனிதர்கள் அதை அழித்துப்போடுவதற்கு அவர் விடமாட்டார். (சங்கீதம் 115:16; பிரசங்கி 1:4) சொல்லப்போனால், ‘பூமியை நாசமாக்குகிறவர்களை நாசமாக்கப்போவதாக’ கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:18.

 சுற்றுச்சூழல் அழிந்துபோகாமல் அதை கடவுளால் பாதுகாக்க முடியும், அதை அவர் பாதுகாக்கவும் போகிறார் என்று பைபிள் சொல்கிறது.

  •    “புயல்காற்றை [கடவுள்] அடக்குகிறார். அப்போது, கடல் அலைகள் அமைதியாகின்றன.” (சங்கீதம் 107:29) இயற்கையைக் கட்டுப்படுத்தும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது. அப்படியென்றால், சுற்றுச்சூழல் பிரச்சினையால் வரும் வானிலை மாற்றத்தையும் அவரால் கண்டிப்பாகச் சரிசெய்ய முடியும்.

  •    “நீங்கள் பூமியை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறீர்கள். அதைச் செழிப்பாக்குகிறீர்கள், அமோகமாக விளைய வைக்கிறீர்கள்.” (சங்கீதம் 65:9) கடவுளுடைய ஆசீர்வாதத்தால் இந்தப் பூமி பூஞ்சோலையாக மாறும்.

 சுற்றுச்சூழல் சரியாகப் போவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ள “பூஞ்சோலைப் பூமி அருகில்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.