Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

Photo by Zhai Yujia/China News Service/VCG via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

சீரழிக்கும் வெள்ளங்கள்—பைபிள் என்ன சொல்கிறது?

சீரழிக்கும் வெள்ளங்கள்—பைபிள் என்ன சொல்கிறது?

 உலகம் முழுவதும் நிறைய மக்கள் சீரழிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சில அறிக்கைகளை இப்போது பார்க்கலாம்.

  •    “140 வருஷங்களாக இல்லாத அளவுக்குக் கடந்த சில நாட்களாக சீனாவின் தலைநகரத்தில் மழை வெளுத்துக்கட்டுகிறது. . . . சனிக்கிழமையிலிருந்து புதன்கிழமைக்குள் 744.8 மில்லிமீட்டர் (29.3 இன்ச்) அளவுக்கு மழை கொட்டித்தீர்த்திருக்கிறது.”—AP செய்திகள், ஆகஸ்ட் 2, 2023.

  •    “கானுன் சூறாவளியால் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அன்று மழையும் புயல் காற்றும் ஜப்பானின் தென் பகுதியைப் புரட்டிப்போட்டிருக்கிறது. அதனால், குறைந்தது இரண்டு பேர் இறந்துவிட்டார்கள். . . . மலை பகுதியாக இருக்கும் மத்திய தைவானில் இந்தப் புயலால் 0.6 மீட்டர் (2 அடி) அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.”—டோய்ச்சூ வெல்லா, ஆகஸ்ட் 3, 2023.

  •    “கனடாவின் அட்லாண்டிக் கரையோர பகுதியில் [நோவா ஸ்கோஷாவில்] வாரக்கடைசியில் கொட்டித்தீர்த்த மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 50 வருஷங்களில் இப்படி நடந்ததே இல்லை.”—பிபிசி செய்திகள், ஜூலை 24, 2023.

 இந்த மாதிரி சம்பவங்களைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

‘கடைசி நாட்களுக்கான’ அடையாளம்

 நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1) நம்முடைய காலத்தில் “திகிலுண்டாக்கும் காட்சிகள்,” அதாவது பயங்கரமான சம்பவங்கள், நடப்பதைப் பார்ப்போம் என்று இயேசு முன்பே சொல்லியிருக்கிறார். (லூக்கா 21:11) வானிலை மாற்றத்தால் இந்த மாதிரி பயங்கரமான சம்பவங்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இவையெல்லாம் ரொம்ப தீவிரமாகவும் இருக்கின்றன, நாம் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத விதமாகவும் இருக்கின்றன.

நம்பிக்கையாக இருங்கள்

 இன்று இந்த உலகத்தில் இந்த மாதிரி மோசமான சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கும்போது நாம் பயப்படாமல் நம்பிக்கையாக இருக்கலாம் என்று பைபிள் சொல்கிறது. ஏன்? ஏனென்றால், “இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கடவுளுடைய அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளுங்கள்” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 21:31; மத்தேயு 24:3.

 இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பதைப் பார்க்கும்போது கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் வரப்போகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. அது இந்தப் பூமியின் இயற்கை சட்டங்களை, நீர் சுழற்சி உட்பட எல்லாவற்றையும் அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.—யோபு 36:27, 28; சங்கீதம் 107:29.

 கடவுளுடைய அரசாங்கம் இந்தப் பூமியின் பிரச்சினைகளை எப்படிச் சரிசெய்யும் என்பதைத் தெரிந்துகொள்ள “பூஞ்சோலைப் பூமி அருகில்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.