விழிப்புடன் இருங்கள்!
சோகத்தின் உச்சத்தில் டீனேஜ் பிள்ளைகள்—பைபிள் என்ன சொல்கிறது?
பிப்ரவரி 13, 2023 அன்று அமெரிக்காவில் இருக்கும் சென்டர்ஸ் பார் டிசீஸ் கன்ட்ரோல் அண்ட் ப்ரிவெண்ஷன் (Centres for Disease Control and Prevention [CDC]) என்ற அமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அமெரிக்காவிலுள்ள டீனேஜ் பிள்ளைகள், மனதளவில் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருந்தது. பள்ளியில் படிக்கிற 40 சதவீதத்துக்கும் அதிகமான டீனேஜ் பிள்ளைகள், எப்போதும் விரக்தியாகவும் சோகமாகவும்தான் இருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை சொன்னது.
CDC-ன் டிவிஷன் ஆஃப் அடோலஸெண்ட் அண்ட் ஸ்கூல் ஹெல்த் (CDC’s Division of Adolescent and School Health [DASH]) அமைப்பின் இயக்குனர் டாக்டர் கேத்லீன் ஏத்தியர் இப்படி சொன்னார்: “கடந்த 10 வருடங்களாகவே இளைஞர்கள் மனதளவில் நாளுக்கு நாள் ரொம்ப பாதிக்கப்பட்டு வருகிறார்கள் . . . ஆனால், எப்போதுமே இல்லாத அளவுக்கு இப்போது டீனேஜ் பெண்கள் மனதளவில் ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நடந்துகொள்ளும் விதம் ரொம்ப மாறியிருக்கிறது, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் அவர்களுக்கு அடிக்கடி வருகிறது.”
அந்த அறிக்கையில்:
பத்து டீனேஜ் பெண்களில் ஒருவரோ அதற்கும் அதிகமானவர்களோ (14 சதவீதம்) செக்ஸ் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு விருப்பமே இல்லையென்றாலும் செக்ஸ் வைத்துக்கொள்ள சொல்லி அவர்களை கட்டாயப்படுத்துகிறார்கள். “இதை கேட்கவே பயங்கரமாக இருக்கிறது . . . நீங்கள் பார்க்கும் பத்து டீனேஜ் பெண்களில் ஒருவரோ அதற்கும் அதிகமானவரோ கற்பழிக்கப்பட்டிருப்பார்கள்” என்று டாக்டர் ஏத்தியர் சொல்கிறார்.
மூன்று டீனேஜ் பெண்களில் குறைந்தது ஒருவராவது (30 சதவீதம்) கண்டிப்பாக தற்கொலை முயற்சி செய்திருப்பார்கள்.
ஐந்து டீனேஜ் பெண்களில் குறைந்தது மூன்று பேராவது (57 சதவீதம்) எப்போதும் விரக்தியாகவும் சோகமாகவும் இருப்பார்கள்.
ஓடி ஆடி சந்தோஷமாக இருக்க வேண்டிய டீனேஜ் வயதில், பிள்ளைகள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை கேட்கும்போது மனம் வலிக்கிறது. இந்த கஷ்டங்களை எல்லாம் சமாளிக்க டீனேஜ் பிள்ளைகள் என்ன செய்யலாம்? அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
டீனேஜ் பிள்ளைகளுக்கு பைபிள் தரும் உதவி
உண்மையிலேயே இன்று நிலைமைகள் ரொம்ப மோசமாக இருக்கின்றன. பைபிள் நம் காலத்தைப் பற்றி எவ்வளவு சரியாக சொல்லியிருக்கிறது என்று கவனியுங்கள். “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” என்று அது சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) ஆனால், இதை தாக்குப்பிடிக்க தேவையான ஆலோசனையையும் பைபிள் கொடுக்கிறது. அதை தெரிந்துகொண்டு அதன்படி வாழ்கிற லட்சக்கணக்கான பிள்ளைகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அவர்களால் இந்த கஷ்டங்களை எல்லாம் நன்றாக சமாளிக்க முடிகிறது. அவர்களுக்கு உதவிய சில பைபிள் கட்டுரைகளை கீழே பாருங்கள்.
தற்கொலை எண்ணத்தை சமாளிக்க...
மனச்சோர்வு, சோகம் மற்றும் தேவையில்லாத எண்ணங்களை சமாளிக்க...
சோகம் ஆனந்தமாக மாற... (ஒயிட்போர்டு அனிமேஷன்)
நேரடியாகவோ இன்டர்நெட் மூலமாகவோ வரும் தொல்லைகளை சமாளிக்க...
வம்பு பண்ணுகிற பசங்களை சமாளிப்பது எப்படி? (ஒயிட்போர்டு அனிமேஷன்)
செக்ஸ் தொல்லைகளையும் தாக்குதல்களையும் சமாளிக்க...
பெற்றோருக்கு பைபிள் தரும் உதவி
டீனேஜ் பிள்ளைகளுக்கு வருகிற கஷ்டங்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று பைபிள் சொல்லித்தருகிறது. பெற்றோர்களுக்கு உதவுகிற சில பைபிள் கட்டுரைகளை கீழே பாருங்கள்.