Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

அரசியல் விஷயங்கள் உலகை ஏன் துண்டு துண்டாக்குகிறது?—பைபிள் என்ன சொல்கிறது?

அரசியல் விஷயங்கள் உலகை ஏன் துண்டு துண்டாக்குகிறது?—பைபிள் என்ன சொல்கிறது?

 அரசியல் விஷயங்கள், இன்று உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. பியூ ஆராய்ச்சி மையத்தின் 2022 அறிக்கை இப்படி சொல்கிறது: “19 நாடுகளில் கணக்கு எடுத்தபோது, வெவ்வேறு அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் பயங்கர கருத்துவேறுபாடுகள் இருப்பதாக 65% மக்கள் ஒத்துக்கொள்கிறார்கள்.”

 அரசியலால் மக்கள் மத்தியில் பிரிவுகளும் சலசலப்புகளும் அதிகமாகிக்கொண்டே போவதை கவனித்திருக்கிறீர்களா? நீங்கள் வாழும் இடத்திலும் இப்படி இருக்கிறதா? ஏன் இப்படி இருக்கிறது? இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? பைபிள் என்ன சொல்கிறது?

பிரிவினைக்கான காரணம்

 நாம் வாழும் இந்த காலத்தை ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்கிறது. இந்த காலத்தில், நிறைய பேருடைய சுபாவம் மோசமாக இருக்கும் என்றும், எல்லாரும் ஒற்றுமையாக இருப்பது நடக்காத காரியம் என்றும் பைபிள் முன்பே சொன்னது.

  •    “கடைசி நாட்களில், சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும். . . . ஏனென்றால், மனிதர்கள் சுயநலக்காரர்களாக, . . . எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக” இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:1-3.

 அரசாங்கங்கள் திறமையாக செயல்பட நிறைய பேர் கடுமையாக உழைத்தாலும், அவை இன்னமும் திணறிக்கொண்டுதான் இருக்கின்றன. மக்களுக்கு வித்தியாசமான கருத்துகள் இருப்பதால், ஒன்றாக சேர்ந்து ஒரு பிரச்சினையை சரி செய்ய நினைப்பது முடியாத விஷயமாக இருக்கிறது. பைபிள் சொன்னது எவ்வளவு உண்மை!

  •    “மனுஷனை மனுஷன் அடக்கி ஆண்டிருப்பதால் அவனுக்குக் கேடுதான் வந்திருக்கிறது.”—பிரசங்கி 8:9.

 இந்த பிரச்சினைகளுக்கான தீர்வை பைபிள் தருகிறது! அது ஒரு அரசாங்கத்தை பற்றி சொல்கிறது. இன்று சமுதாயத்தை வாட்டி எடுக்கும் எல்லா பிரச்சினைகளையும் அந்த அரசாங்கத்தின் தலைவரால் தீர்க்க முடியும்.

மக்கள்மேல் அக்கறை இருக்கிற திறமையான ஒரு தலைவர்

 எல்லா திறமைகளும் இருக்கிற ஒரு தலைவரை பற்றி பைபிள் சொல்கிறது. அவரை போல் வேறு யாருமே கிடையாது! அவர்தான் இயேசு கிறிஸ்து! அவரிடம் சக்தியும் அதிகாரமும் இருக்கிறது. மக்கள் எல்லாரையும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ வைக்க அவர் ஆசைப்படுகிறார்.

  •    “அவருடைய ஆட்சியில் நீதிமான்கள் செழிப்பார்கள். . . . மிகுந்த சமாதானம் இருக்கும்.”—சங்கீதம் 72:7.

  •    “எல்லா தேசத்து மக்களும் அவருக்குச் சேவை செய்வார்கள்.”—சங்கீதம் 72:11.

 இயேசு அன்புள்ளம்கொண்ட ஒரு தலைவர். அவர் மக்கள்மேல் அக்கறை வைத்திருக்கிறார்; உதவ துடிக்கிறார். அதுவும், அநியாயமாக நடத்தப்படுகிற மக்களுக்கு அவர் உதவ நினைக்கிறார்.

  •    “ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர் உதவி செய்வார். எளியவனுக்கும் ஆதரவற்றவனுக்கும் கைகொடுப்பார். ஏழை எளியவர்கள்மேல் பரிதாபப்படுவார். ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும் அவர்களை விடுவிப்பார்.”—சங்கீதம் 72:12-14.

 பரலோகத்தில் இருந்து ஆட்சி செய்கிற இந்த அரசாங்கத்தை பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ளுங்கள். இந்த அரசாங்கத்திலிருந்து நீங்கள் எப்படி நன்மையடையலாம்? அதை எப்படி ஆதரிக்கலாம்?