Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

பாயும் தோட்டாக்கள்! பலியாகும் உயிர்கள்!!—பைபிள் என்ன சொல்கிறது?

பாயும் தோட்டாக்கள்! பலியாகும் உயிர்கள்!!—பைபிள் என்ன சொல்கிறது?

 ஜூலை 2022-ல் உலகம் முழுவதும் பதற வைக்கிற துப்பாக்கிச்சூடுகள் நடந்திருக்கின்றன:

  •   ”ஜப்பானின் ரொம்ப பிரபலமான ஒரு அரசியல்வாதி சுட்டுக்கொல்லப்பட்டது [முன்னாள் பிரதமர் சின்ஷோ அபே] இந்த நாட்டை மட்டுமல்ல உலகத்தையே அதிர வைத்திருக்கிறது. இந்த மாதிரியான பயங்கரமான குற்றங்கள் குறைவாக நடக்கிற... துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கிற... இந்த நாட்டில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.“—ஜூலை 10, 2022, ஜப்பான் டைம்ஸ்.

  •   ”கோபன்ஹாகனில் இருக்கிற ஷாப்பிங் மாலில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் டென்மார்க்கையே அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.”—ஜூலை 4, 2022, ராய்ட்டர்ஸ்.

  •   ”தென் ஆப்பிரிக்கா: சோவீட்டோ டவுனில் இருக்கிற ஒரு பாரில் துப்பாக்கி ஏந்திய ஒருவன் 15 பேரை சுட்டு தள்ளினான்.”—ஜூலை 10, 2022, தீ கார்டியன்.

  •   ”ஜூலை 4 மற்றும் அதை ஒட்டிய விடுமுறை நாட்களில், 220-க்கும் அதிகமான மக்கள் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப்பட்டார்கள்.“—ஜூலை 5, 2022, சிபிஎஸ் நியூஸ்.

 இந்த மாதிரி வன்முறை சம்பவங்களே நடக்காத ஒரு காலம் வருமா? அதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

வன்முறைக்கு ஒரு முடிவு

 நாம் வாழ்கிற காலத்தை, ‘கடைசி நாட்கள்’ என்று பைபிள் சொல்கிறது. இந்த காலத்தில் மக்கள் கொடூரமாக மிருகத்தனமாக நடந்துகொள்வார்கள் என்றும் அது சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1, 3) இந்த மாதிரி வன்முறையான சம்பவங்கள் நடப்பதால் மக்கள் பயந்து பயந்து வாழ்கிறார்கள். (லூக்கா 21:11) ஆனால், எதிர்காலத்தில் வன்முறைக்கு எல்லாம் கண்டிப்பாக முடிவு வரும் என்று பைபிள் சொல்கிறது. அந்த சமயத்தில், ”ஜனங்கள் சமாதானமான சூழலில் வாழ்வார்கள். பாதுகாப்பான வீடுகளிலும் நிம்மதியான இடங்களிலும் குடியிருப்பார்கள்” என்றும் சொல்கிறது. (ஏசாயா 32:18) ஆனால், இன்றைக்கு நடக்கிற வன்முறைக்கு எப்படி முடிவு வரும்?

 கடவுள் கெட்டவர்களை அழித்துவிடுவார், எல்லா ஆயுதங்களையும் ஒழித்துக் கட்டிவிடுவார்.

  •   ”பொல்லாதவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிக்கப்படுவார்கள்.”—நீதிமொழிகள் 2:22.

  •    ‘பூமி முழுவதும் [கடவுள்] போர்களுக்கு முடிவுகட்டுவார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிப்பார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிப்பார்.’—சங்கீதம் 46:9.

 சமாதானமாக வாழ்வது எப்படி என்று கடவுள் மக்களுக்கு சொல்லித் தருவார். இப்படி, வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக இருக்கிற எல்லாவற்றையும் கடவுள் நீக்கிவிடுவார்.

  •   ”என்னுடைய பரிசுத்த மலையில் யாருக்கும் எந்த ஆபத்தும் வராது. எந்தக் கேடும் வராது. ஏனென்றால், கடல் முழுவதும் தண்ணீரால் நிறைந்திருப்பது போல பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்.”—ஏசாயா 11:9.

  •   ‘தங்களுடைய வாள்களை மண்வெட்டிகளாக மாற்றுவதற்கும் ஈட்டிகளை அரிவாள்களாக அடிப்பதற்கும்’ கடவுள் இன்றைக்கே நிறைய மக்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்.—மீகா 4:3.

 பயமே இல்லாத ஒரு உலகம் வரும் என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. அதைப் பற்றி தெரிந்துகொள்ள, “‘பாதுகாப்பில்லை’ என்று பயமா?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 வன்முறைக்கான நிரந்தர தீர்வைப் பற்றித் தெரிந்துகொள்ள, “வன்முறை இல்லாத உலகம் வருமா?“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.