Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

YURI LASHOV/AFP via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

போர்களும் கிறிஸ்தவர்களும்—பைபிள் என்ன சொல்கிறது?

போர்களும் கிறிஸ்தவர்களும்—பைபிள் என்ன சொல்கிறது?

 கிறிஸ்தவ தலைவர்கள் போரை ஆதரிக்கிறார்கள் என்பதை உக்ரைன் போர் காட்டியிருக்கிறது. போரை ஆதரிக்க சொல்லி அவர்கள் மக்களையும் உற்சாகப்படுத்துகிறார்கள். சில செய்தி அறிக்கைகளைப் பாருங்கள்:

  •   “உக்ரைனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் போர் வீரர்களை உயர்வாக பார்க்கிறோம், அவர்களுக்கு நன்றியோடு இருக்கிறோம். . . . எங்களுடைய பிரார்த்தனைகளும் ஆதரவும் எப்போதும் உங்கள் கூடவே இருக்கும்.”—கீவ்வை சேர்ந்த மெட்ரோபாலிட்டன் எப்பிஃபானியஸ் I, தி ஜெருசலேம் போஸ்டின் அறிக்கை, மார்ச் 16, 2022.

  •   “ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை அன்று, ரஷ்ய போர் வீரர்களுக்காக ஒரு விசேஷ கூட்டத்தை நடத்தினார். உக்ரைனுக்கு எதிரான ராணுவ தாக்குதலில் ‘ரஷ்யாவால் மட்டுமே ஜெயிக்க முடியும்’ என்று சொல்லி, போர் வீரர்களை நாட்டுக்காக போராடும்படி கேட்டுக்கொண்டார்.”—ராய்ட்டர்ஸ், ஏப்ரல் 3, 2022.

 கிறிஸ்தவர்கள் போரில் கலந்துகொள்ள வேண்டுமா? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

பைபிள் உண்மையிலேயே என்ன சொல்கிறது?

 உண்மையிலேயே இயேசுவுக்கு சீடர்களாக இருக்க நினைக்கிறவர்கள் போரில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று பைபிள் சொல்கிறது.

  •   “உன் வாளை உறையில் போடு; வாளை எடுக்கிற எல்லாரும் வாளால் சாவார்கள்.”—மத்தேயு 26:52.

     போரை ஆதரிக்கும் ஒரு நபர் அல்லது போர் செய்யும் ஒரு நபர் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிகிறார் என்று அர்த்தமா?

  •   “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:34, 35.

     போரை ஆதரிக்கும் ஒரு நபர் இயேசு சொன்ன மாதிரியான அன்பைக் காட்டுகிறாரா? அவர் இயேசுவின் சீடராக, அதாவது அவரை பின்பற்றுகிறவர்களில் ஒருவராக, இருக்க முடியுமா?

 இதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, “போரைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

கிறிஸ்தவர்களும் இன்று நடக்கிற போர்களும்

 இன்று நடக்கிற போர்களில் கிறிஸ்தவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று சொல்வது நடக்கிற விஷயமா? ஆமாம் கண்டிப்பாக! நாம் வாழும் இந்த காலத்தில், அதாவது ‘கடைசி நாட்கள்’ என்று சொல்லப்படும் இந்தக் காலத்தில், ‘போர் செய்யக் கற்றுக்கொள்ளாத’ ஜனங்கள் இருப்பார்கள் என்று பைபிள் முன்பே சொன்னது. (ஏசாயா 2:2, 4) இவர்கள் எல்லா தேசத்திலிருந்தும் வந்தவர்கள், இயேசுவின் போதனைப்படி வாழ்கிறவர்கள்.

 சீக்கிரத்தில், ‘சமாதானத்தின் கடவுளான’ யெகோவா a தன்னுடைய பரலோக அரசாங்கத்தின் மூலமாக மக்களை “கொடுங்கோல் ஆட்சியிலிருந்தும் வன்முறையிலிருந்தும்” விடுவிப்பார்.—பிலிப்பியர் 4:9; சங்கீதம் 72:14.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.