Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

யெகோவாவின் சாட்சிகளும் இனப்படுகொலையும்—பைபிள் என்ன சொல்கிறது?

யெகோவாவின் சாட்சிகளும் இனப்படுகொலையும்—பைபிள் என்ன சொல்கிறது?

 ஜனவரி 27, 2023 அன்று, சர்வதேச இன அழிப்பு நினைவு நாள் அனுசரிக்கப்படும். 75 வருஷங்களுக்கு முன்பு நடந்த இந்த கொடுமையை கடவுள் ஏன் தடுக்கவில்லை என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம்.

 இந்த கொடூரமான சம்பவத்தில், யூத இனத்தை சேர்ந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். லட்சக்கணக்கானவர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்கள். இவர்களோடு சேர்த்து, வேறு சில தொகுதிகளை சேர்ந்தவர்களும் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இதில் யெகோவாவின் சாட்சிகளும் பாதிக்கப்பட்டார்கள். அவர்களுடைய பைபிள் நம்பிக்கையின் காரணமாக துன்புறுத்தப்பட்டார்கள்.

‘நல்ல எதிர்காலமும் நம்பிக்கையும்’

 இனப்படுகொலை மாதிரியான கொடூர சம்பவங்கள் மறுபடியும் நடக்குமோ என்று நிறைய பேர் இன்று பயப்படுகிறார்கள். ஆறுதலான விஷயம் என்னவென்றால், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட பயங்கரமான சம்பவங்கள் கண்டிப்பாக நடக்காது என்று பைபிள் சொல்கிறது.

  •    “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்.’”—எரேமியா 29:11. a

 கடவுளுடைய இந்த ஆசை எப்போது நிறைவேறும்? கெட்ட விஷயங்களை நீக்கிவிட்டு, அதன் பாதிப்புகளை சரிசெய்ய கடவுள் சீக்கிரத்தில் செயலில் இறங்குவார். அப்போது அவருடைய ஆசை நிறைவேறும். அவர்...

  •    ஈவிரக்கமில்லாமல் மற்றவர்களை கொடுமைப்படுத்துகிறவர்களை அழிப்பார்.—நீதிமொழிகள் 2:22.

  •    வேதனைகளை அனுபவித்தவர்களுடைய காயங்களை ஆற்றுவார்.—வெளிப்படுத்துதல் 21:4.

  •    இறந்துபோனவர்களை இந்த பூமியில் மறுபடியும் வாழ வைப்பார்.—யோவான் 5:28, 29.

 பைபிள் கொடுக்கிற இந்த நம்பிக்கையை நீங்கள் தாராளமாக நம்பலாம். ஏன் நம்பலாம் என்று தெரிந்துகொள்ள, எங்களோடு சேர்ந்து பைபிளை இலவசமாக படியுங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.