விழிப்புடன் இருங்கள்!
யாரை நம்புவது?—பைபிள் என்ன சொல்கிறது?
நம்பிக்கையாக இருக்க வேண்டிய ஆட்களே ஏமாற்றும்போது மக்கள் உடைந்துபோகிறார்கள். நிறைய பேர் இவர்களை நம்புவதையே நிறுத்திவிட்டார்கள்:
மக்களுடைய நலனில் அக்கறை காட்டாத சுயநலமான அரசியல் தலைவர்கள்.
உண்மைகளை மூடிமறைக்கும் மீடியாக்கள்.
மக்களுக்கு வேண்டிய நல்லதைச் செய்யாத விஞ்ஞானிகள்.
கடவுளைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதற்குப் பதிலாக அரசியலோடு கைகோர்த்திருக்கும் மதத் தலைவர்கள்.
நிலைமை இப்படி இருப்பதால், யாரை நம்புவது என்பதில் மக்கள் உஷாராக இருப்பது நல்லதுதான். பைபிளும் இப்படி எச்சரிக்கிறது:
“அதிகாரிகளை நம்பாதீர்கள், மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள். அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.”—சங்கீதம் 146:3.
நம்பகமான ஒருவர்
நீங்கள் தாராளமாக நம்ப முடிந்த ஒருவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்தான் இயேசு கிறிஸ்து. அவர் வெறுமனே ரொம்பக் காலத்துக்கு முன்பு வாழ்ந்த நல்ல மனிதர் மட்டும் கிடையாது. அவரை கடவுள் “ராஜாவாக” நியமித்திருக்கிறார். அவருடைய “ஆட்சிக்கு முடிவே இருக்காது.” (லூக்கா 1:32, 33) கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவான இயேசு, இப்போது பரலோகத்தில் தன் ஆட்சியை ஆரம்பித்துவிட்டார்.—மத்தேயு 6:10.
இயேசுவை ஏன் நம்பலாம் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு இந்தக் கட்டுரைகளைப் பாருங்கள்: “கடவுளுடைய அரசாங்கத்தின் அரசர் யார்?” மற்றும் “கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் சாதிக்கும்?”