Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழிப்புடன் இருங்கள்!

எகிறும் விலைவாசி!—பைபிள் என்ன சொல்கிறது?

எகிறும் விலைவாசி!—பைபிள் என்ன சொல்கிறது?

 ஜூன் 2022-ல் உலக வங்கி குழுவின் பிரசிடென்ட் ஒரு அறிக்கையில் இப்படி எச்சரித்தார்: ”உலகத்தின் பொருளாதாரம் மறுபடியும் ஆபத்தில் இருக்கிறது. ஒருபக்கம் கன்னாபின்னாவென்று விலைவாசி ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பணம் இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.“

 ”எரிபொருள் விலை, சாப்பாட்டு பொருள்கள் விலை எல்லாம் எங்கோ ஏறிக்கொண்டே போகிறது. இதனால் ஏழை நாடுகளில் இருக்கிற மக்கள் ரொம்ப அவதிப்படுகிறார்கள்“ என்று பொருளாதார வளர்ச்சியை கவனித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு சொன்னது.

 நமக்கு ஏன் இப்படி பணப் பிரச்சினை வருகிறது? அதை நாம் எப்படி சமாளிக்கலாம்? இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்று ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்? இதற்கான பதிலை தெரிந்துகொள்ள பைபிள் உதவுகிறது.

”கடைசி நாட்களில்“ எகிறும் விலைவாசி

  •    இன்று நாம் வாழும் காலத்தை ”கடைசி நாட்கள்“ என்று பைபிள் சொல்கிறது.—2 தீமோத்தேயு 3:1.

  •    இந்த சமயத்தில் ”திகிலுண்டாக்கும் காட்சிகள்” அதாவது பயமுறுத்தும் சம்பவங்கள் நடக்கும் என்று இயேசு சொன்னார். (லூக்கா 21:11) எகிறும் விலைவாசியை பார்க்கும்போது பயமாகத்தான் இருக்கிறது. எதிர்காலம் என்னவாகுமோ, குடும்பத்தை எப்படி கவனிக்கப்போகிறோமோ என்று மக்கள் பயப்படுகிறார்கள்.

  •    இந்த சமயத்தில் சாப்பாட்டு பொருள்களின் விலையும் அதிகமாகும் என்று வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறது. ”ஒரு குரல் வருவதுபோல் எனக்குக் கேட்டது; அது, . . . ஒரு நாள் கூலிக்கு ஒரு படி கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கு மூன்று படி பார்லி . . . என்று சொன்னது.“—வெளிப்படுத்துதல் 6:6, அடிக்குறிப்பு.

 ‘கடைசி நாட்களைப்’ பற்றியும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இருக்கும் தீர்க்கதரிசனங்களைப் பற்றியும் அதிகமாகத் தெரிந்துகொள்ள, 1914-லிருந்து உலகம் மாறிவிட்டது என்ற வீடியோவையும் நான்கு குதிரைவீரர்கள்–இவர்கள் யார்? என்ற கட்டுரையையும் பாருங்கள்.

எல்லா பணப் பிரச்சினைக்கும் தீர்வு

  •    “ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள். திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள். ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார். ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்.”—ஏசாயா 65:21, 22.

  •    “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.”—சங்கீதம் 72:16.

  •    “‘கஷ்டத்தில் தவிக்கிறவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதாலும், ஏழைகள் வேதனையில் பெருமூச்சு விடுவதாலும், நான் நடவடிக்கை எடுக்கப்போகிறேன்.’ . . . என்று யெகோவா சொல்கிறார்.”—சங்கீதம் 12:5.  a

 மோசமான இந்த பணப் பிரச்சினைக்கு சீக்கிரத்தில் கடவுள் முடிவுகட்டப் போகிறார்—ஏதோ ஒரு நாட்டில் மட்டுமல்ல, இந்த உலகம் முழுவதும்! அது எப்படி என்று தெரிந்துகொள்ள பசி-பட்டினியே இல்லாத காலம் வருமா? என்ற கட்டுரையை படித்துப் பாருங்கள்.

 எகிறும் விலைவாசியை சமாளிக்க இப்போதே நமக்கு பைபிள் உதவி செய்யும். எப்படி? பணத்தை சரியாக பயன்படுத்துவதற்கு பிரயோஜனமான நிறைய ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. (நீதிமொழிகள் 23:4, 5; பிரசங்கி 7:12) இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடுங்கள், குறைந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்டுவது எப்படி? என்ற கட்டுரைகளைப் பாருங்கள்.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.