Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இடது: ஐயன் சூறாவளி, ப்ளோரிடா, USA, செப்டம்பர் 2022 (Sean Rayford/Getty Images); நடுவில்: மகனோடு தப்பித்து ஓடும் தாய், டூனெட்ஸ்க், உக்ரைன், ஜூலை 2022 (Alex Chan Tsz Yuk/SOPA Images/LightRocket via Getty Images); வலது: நிறைய பேருக்கு கொரோனா பரிசோதனை, பெய்ஜிங், சீனா, ஏப்ரல் 2022 (Kevin Frayer/Getty Images)

விழிப்புடன் இருங்கள்!

2022: கவலைகளும் குழப்பங்களும் நிறைந்த வருடம்!—பைபிள் என்ன சொல்கிறது?

2022: கவலைகளும் குழப்பங்களும் நிறைந்த வருடம்!—பைபிள் என்ன சொல்கிறது?

 2022-ல் எதைப் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்பட்டோம்? போர், பணக்கஷ்டம், இயற்கை பேரழிவுகள்! இதற்கெல்லாம் என்ன காரணம் என்று பைபிளில் மட்டும்தான் பதில் இருக்கிறது.

2022-ல் நடந்த சம்பவங்களின் அர்த்தம்

 2022-ல் நடந்த சம்பவங்கள் எல்லாமே பைபிள் சொல்கிற மாதிரி நாம் ”கடைசி நாட்களில்“ வாழ்கிறோம் என்பதை இன்னும் தெளிவாக நிரூபிக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1) இந்த கடைசி நாட்கள் 1914-ல் ஆரம்பித்தது. நம் நாளைப் பற்றி பைபிளில் முன்பே சொல்லியிருக்கும் சம்பவங்களும், இப்போது நடக்கும் சம்பவங்களும் எப்படி ஒத்துப்போகின்றன என்று பாருங்கள்:

 ‘போர்கள்’—மத்தேயு 24:6.

  •    ”2022 ஐரோப்பாவில் போரின் பயங்கரம் திரும்பி வந்த ஆண்டு.” a

 உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 ‘பஞ்சங்கள்’மத்தேயு 24:7.

  •    ”2022: பஞ்சம் கோரத் தாண்டவம் ஆடிய ஆண்டு.“ b

 ‘கொள்ளைநோய்கள்’லூக்கா 21:11.

  •    ”போலியோ திரும்பவும் தலைதூக்கியது, குரங்கு அம்மை பீதியை கிளப்பியது, கொரோனா இன்னும் பயமுறுத்திக்கொண்டே இருக்கிறது. இந்தக் கொள்ளைநோய்கள் எவ்வளவு ஆபத்தானது, மனிதர்கள் எவ்வளவு ஆபத்தில் இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.“ c

 60 லட்சம் உயிர்களை சூறையாடிய கொரோனா“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 “திகிலுண்டாக்கும் காட்சிகள்”லூக்கா 21:11.

  •    ”வெப்ப அலைகள், வறட்சி, காட்டுத் தீ, வெள்ளம். இப்படி, 2022-ன் கோடைகாலத்தில் வெப்ப நிலைகள் மாறி மாறி ஆட்டம் காட்டின. இதனால் பெரிய அழிவுகள் நடந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை இழந்தார்கள். லட்சக்கணக்கானவர்கள் வீட்டை இழந்தார்கள்.“ d

 சரித்திரம் காணாத வெப்பநிலை அதிகரிப்பு“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

 ‘கலவரங்கள்’லூக்கா 21:9.

  •    ”பொருளாதார பிரச்சினைகளால் மக்கள் கோபத்தில் கொதித்து எழுந்தார்கள். பணவீக்கத்தால், இதுவரை இல்லாத அளவு 2022-ல் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் செய்திருக்கிறார்கள்.“ e

 எகிறும் விலைவாசி!“ என்ற கட்டுரையைப் பாருங்கள்.

அடுத்த வருஷம் என்ன நடக்கும்?

 2023-ல் என்ன நடக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. நமக்கு தெரிந்ததெல்லாம், பரலோகத்திலிருக்கிற கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் பூமியில் பெரிய மாற்றங்களை கொண்டுவரும். (தானியேல் 2:44) மனிதர்களின் கஷ்டங்களுக்கு காரணமாய் இருக்கும் எல்லாவற்றையும் அது துடைத்து அழித்துவிடும். பூமியில் கடவுளுடைய ஆசையை நிறைவேற்றும். —மத்தேயு 6:9, 10.

 ”விழிப்புடன் இருங்கள்” என்று இயேசு சொன்னார். (மாற்கு 13:37) பைபிளில் சொல்லியிருப்பது போல் இன்று உலக நிலைமைகள் இருப்பதை பார்க்கும்போது, ‘விழிப்பாய் இருங்கள்’ என்று நாங்களும் உங்களை கேட்டுக்கொள்கிறோம். பைபிள் எப்படி இன்று உங்களுக்கு உதவிசெய்யும்? ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்று நீங்களும் உங்கள் குடும்பமும் நம்பிக்கையுடன் இருக்க பைபிள் எப்படி உதவிசெய்யும்? இதற்கான பதிலை தெரிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

a AP செய்திகள், ”2022 ஐரோப்பாவில் போரின் பயங்கரம் திரும்பி வந்த ஆண்டு“—ஜில் லாலெஸ், டிசம்பர் 8, 2022.

b உலக உணவு திட்டம், ”உலகளாவிய உணவு தட்டுப்பாடு.“

c JAMA சுகாதார மையம், ”தொற்றுநோய்களின் காலத்தில் வாழ்க்கை—கொரோனா பெருந்தொற்று முதல் குரங்கு அம்மை, போலியோ, இனி வரப்போகும் நோய்கள் வரை“—லாரன்ஸ் ஓ. காஸ்டின், JD, செப்டம்பர் 22, 2022.

d Earth.Org, ”2022 கோடைகாலத்தில் சரித்திரம் காணாத வெப்பநிலை மாற்றம்—என்ன காரணம்?“—மார்டினா இகினி, அக்டோபர்  24, 2022.

e கார்னகி சர்வதேச சமாதானத்துக்கான நன்கொடை நிதி, ”2022-ல் உலகளாவிய போராட்டங்களுக்கு தீ மூட்டிய பொருளாதாரம்“—தாமஸ் கரோதெர்ஸ் மற்றும் பெஞ்சமின் ஃபெல்ட்மன், டிசம்பர் 8, 2022.