விழிப்புடன் இருங்கள்!
2024-ல் நம்பிக்கை பிறக்குமா?—பைபிள் என்ன சொல்கிறது?
‘2024-லே வந்துவிட்டது, ஆனாலும் நாம் படுகிற கஷ்டங்களுக்கு மட்டும் தீர்வே கிடைக்காது’ என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படிக் கிடையாது, நமக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. எப்படிச் சொல்லலாம்?
பைபிள் தரும் நம்பிக்கை
தீரவே தீராது என்று நாம் நினைக்கிற பிரச்சினைகளைக் கூட கடவுள் சரி செய்யப்போவதாக பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. சீக்கிரத்தில், நம்முடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:4.
எதிர்காலத்தைப் பற்றி பைபிள் தரும் வாக்குறுதிகளைத் தெரிந்துகொள்ள “கடவுளுடைய அரசாங்கம் என்னவெல்லாம் சாதிக்கும்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
பைபிள் இப்போதே உங்களுக்கு உதவும்
பைபிள் நமக்கு எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கை கொடுக்கிறது, அதனால் இப்போது நாம் நம்பிக்கை இழந்துவிடாமல் இருக்கவும் நல்லதே நடக்கும் என்ற கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளவும் முடியும். (ரோமர் 15:13) இப்போது நாம் அனுபவிக்கிற பசிபட்டினி, அநியாயம், நோய் போன்ற கஷ்டங்களைச் சமாளிக்க பைபிள் நமக்கு நடைமுறையான ஆலோசனை அளிக்கிறது.
சிறு வயதிலிருந்தே வறுமையில் வாடிய ஒருவருக்கு பைபிளில் உள்ள நம்பிக்கை எப்படி சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தந்தது என்பதைத் தெரிந்துகொள்ள ஹுவான் பாப்லோ ஜெர்மென்யோ: யெகோவா எனக்கு சந்தோஷமான வாழ்க்கையைத் தந்தார் என்ற வீடியோவைப் பாருங்கள்.
குற்றவுணர்வு, சோகம், கவலை, நாம் நேசிக்கும் ஒருவரை மரணத்தில் இழப்பதால் வரும் வலி போன்ற உணர்ச்சிகளைச் சமாளிக்க பைபிள் எப்படி உதவுகிறது என தெரிந்துகொள்ளுங்கள். “எனக்கு ஆறுதல் தருகிற வார்த்தைகள் பைபிளில் இருக்கிறதா?” என்ற கட்டுரையை வாசித்துப் பாருங்கள்.
”யார்மேலேயும் அக்கறை காட்டாத கல்நெஞ்சுக்காரியாக” இருந்த ஒரு ராணுவ அதிகாரிக்கு பைபிளைப் படித்ததால் எப்படி வாழ்க்கையில் நம்பிக்கை கிடைத்தது என்று பாருங்கள். என் துப்பாக்கிய கீழ போட்டேன் என்ற வீடியோவைப் பாருங்கள்.
2024-ஐ உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சந்தோஷம் நிறைந்த வருஷமாக ஆக்குங்கள். பைபிள் உங்களுக்கு எப்படி உதவும் என்று அதிகமாகத் தெரிந்துகொள்ளுங்கள். எங்களோடு சேர்ந்து இலவசமாக பைபிளைப் படித்து பாருங்கள். கடவுள் உங்களுக்கு இப்போதே எப்படி ‘நிம்மதியையும் . . . நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும்’ கொடுக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.—எரேமியா 29:11.