Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

id-work/DigitalVision Vectors via Getty Images

விழிப்புடன் இருங்கள்!

ஏன் இவ்வளவு வெறுப்பு?—பைபிள் என்ன சொல்கிறது?

ஏன் இவ்வளவு வெறுப்பு?—பைபிள் என்ன சொல்கிறது?

 எங்கே பார்த்தாலும் வெறுப்பு... பாகுபாடு... வன்முறை... போர். இந்த மாதிரி செய்திகளுக்கு இன்றைக்கு பஞ்சமே இல்லை.

  •   “வெறுப்பைக் கொடுக்கிற பேச்சுச்கள்தான் சோஷியல் மீடியாவில் குவிந்து கிடக்கின்றன. அதற்குக் காரணம் இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் நடக்கிற சண்டை, தீவிரவாத செயல்களைத் தூண்டுகிற ஆட்கள்.”​—தி நியு யார்க் டைம்ஸ், நவம்பர் 15, 2023.

  •   “மக்கள் பாகுபாடு பார்ப்பதால், வெறுப்பைக் கொட்டுகிற பேச்சுகளும் வன்முறையான செயல்களும் அக்டோபர் 7-ம் தேதியிலிருந்து கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது, இதை உலகமே கவலையோடு பார்த்துக்கொண்டிருக்கிறது.”​—டென்னிஸ் பிரான்சிஸ், ஐக்கிய நாடுகளின் பொதுப் பேரவைத் தலைவர், நவம்பர் 3, 2023.

 வெறுப்பைக் கொட்டும் பேச்சுகளும், வன்முறையும் போரும் இந்த உலகத்துக்கு புதிது ஒன்றும் கிடையாது. சொல்லப்போனால், முற்காலத்தில் வாழ்ந்த ஆட்கள்கூட ‘கொடூரமான வார்த்தைகளை அம்புகள்போல் குறிபார்த்து எறிந்தார்கள்,’ மற்றவர்களோடு சண்டை இழுத்தார்கள், வன்முறையில் இறங்கினார்கள் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 64:3; 120:7; 140:1) இன்றைக்கு ஏன் இந்த உலகத்தில் வெறுப்பு கொட்டிக் கிடக்கிறது, அதற்கான முக்கிய காரணத்தை பைபிள் சொல்கிறது.

வெறுப்பு—ஒரு அடையாளம்

 இன்றைக்கு வெறுப்பைக் காட்டுவது மனிதர்களின் ரத்தத்தில் ஊறிப்போயிருக்கிறது. ஏன் என்பதற்கான இரண்டு காரணங்களை பைபிள் சொல்கிறது.

  1.  1. ‘அக்கிரமம் அதிகமாவதால் பெரும்பாலானவர்களின் அன்பு குறைந்துவிடுகிற’ ஒரு காலம் வரும் என்று பைபிள் முன்கூட்டியே சொன்னது. (மத்தேயு 24:12) அதோடு, அன்பைக் காட்டுவதற்குப் பதிலாக மக்கள் ஒருவர்மேல் ஒருவர் வெறுப்பைத்தான் கொட்டுவார்கள் என்றும் பைபிள் சொன்னது.—2 தீமோத்தேயு 3:1-5.

  2.  2. வெறுப்பில் ஊறிப்போயிருக்கிற இந்த உலகத்தை இன்றைக்கு ஆட்டிப்படைப்பது கொடூரமும் வெறித்தனமும் நிறைந்த பிசாசாகிய சாத்தான்தான். “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது.—1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:9, 12.

 சீக்கிரத்தில் இந்த வெறுப்பின் ஆணிவேரையே கடவுள் பிடுங்கி எறிந்துவிடுவார் என்ற நம்பிக்கையான செய்தி பைபிளில் இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த வெறுப்பால் ஏற்பட்ட எல்லா கஷ்டங்களையும் கடவுள் தீர்த்துவிடுவார். பைபிளின் வாக்குறுதிகள் இதோ:

  •   “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளிப்படுத்துதல் 21:4.