வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?
1 | பாரபட்சம் பார்க்காதீர்கள்
பைபிள் போதனை:
“கடவுள் பாரபட்சம் காட்டாதவர் . . . , அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
போதனையின் அர்த்தம்:
நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நம்முடைய இனம், தேசம், நிறம், கலாச்சாரம் ஆகியவற்றை வைத்து யெகோவா * தேவன் முடிவு செய்வது கிடையாது. நாம் உள்ளுக்குள் எப்படி இருக்கிறோம் என்பதைத்தான் அவர் பார்க்கிறார். “மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்” என்று அவரே சொல்லியிருக்கிறார்.—1 சாமுவேல் 16:7.
நீங்கள் இப்படிச் செய்யலாம்:
ஒருவருடைய இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நம்மால் படிக்க முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், கடவுளை மாதிரியே நம்மாலும் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்ள முடியும். ஒரு நபரைப் பார்க்கும்போது, ‘அவர் இந்த இனத்தை சேர்ந்தவர்... இந்த தேசத்தை சேர்ந்தவர்...’ என்று பார்க்காமல் அவர் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்று பாருங்கள். ஒருவர்மேல் உங்களுக்குத் தப்பெண்ணம் இருப்பது தெரியவந்தால், அந்த எண்ணத்தை எடுத்துப்போட கடவுளிடம் உதவி கேட்டு வேண்டுங்கள். (சங்கீதம் 139:23, 24) பாரபட்சம் பார்க்காமல் இருப்பதற்கு உதவ சொல்லி யெகோவாவிடம் உருக்கமாக வேண்டினால் அவர் உங்களுக்குக் கண்டிப்பாக உதவி செய்வார்.—1 பேதுரு 3:12.
^ பாரா. 6 யெகோவா என்பது கடவுளுடைய பெயர்.—சங்கீதம் 83:18.
“அதுவரைக்கும் ஒரு வெள்ளைக்காரர் பக்கத்துலகூட நான் உட்கார்ந்தது இல்ல . . . உலகம் முழுசும் இருக்கிற ஒரு பெரிய குடும்பத்துல இப்போ நானும் ஒருத்தனா இருக்கேன்.”—டைட்டஸ்