காவற்கோபுரம் எண் 1 2023 | மனமே மனமே! நீ நலமா?
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் மனநோயால் அவதிப்படுகிறார்கள். பெரியவர்கள்-சிறியவர்கள், பணக்காரர்கள்-ஏழைகள், படித்தவர்கள்-படிக்காதவர்கள் என்று யாருமே இதற்கு விதிவிலக்கு அல்ல. வித்தியாசமான நாடு, கலாச்சாரம், மதத்தைச் சேர்ந்தவர்கள் என யாரையும் இந்த நோய் விட்டுவைப்பதில்லை. ஆனால், மனநோய் என்றால் உண்மையிலேயே என்ன? அது எப்படி மக்களை பாதிக்கிறது? இந்த நோய்க்கு சரியான மருத்துவ சிகிச்சை எடுப்பது ஏன் முக்கியம்? இதை பற்றியெல்லாம் இந்த பத்திரிகை சொல்லும். பைபிள் கொடுக்கிற சில டிப்ஸை பற்றியும் பார்ப்போம்.
மனநோய்—உலக பிரச்சினை
வயது வித்தியாசம் இல்லாமல் யாரை வேண்டுமானாலும் மனநோய் பாதிக்கும். மன ஆரோக்கியத்தை காக்க பைபிள் தரும் டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள்.
கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறது
வேறு யாரையும்விட யெகோவா நம் உணர்ச்சிகளை நன்றாக புரிந்துகொள்கிறார் என்று ஏன் உறுதியாக சொல்லலாம்?
1 | கடவுளிடம் பேசுங்கள்—“உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்”
மனதை குடையும் பிரச்சினைகளைப் பற்றி உண்மையிலேயே கடவுளிடம் பேச முடியுமா? மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெபம் எப்படி உதவும்?
2 | பைபிள் தரும் “ஆறுதல்”
மனதை ரணமாக்குகிற உணர்ச்சிகள் சீக்கிரத்தில் மறையும் என்ற நம்பிக்கையை பைபிள் தருகிறது.
3 | பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் நபர்கள்
வேதனையான உணர்ச்சிகளால் கஷ்டப்படும்போது, பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற கடவுள்பக்தியுள்ள ஆண்களும் பெண்களும் நம்மை போலவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வது நமக்கு ஆறுதலாக இருக்கும்.
4 | பைபிள் தரும் நல்ல ஆலோசனைகள்
பைபிள் வசனங்களை யோசித்து பார்ப்பதும் எட்டிப்பிடிக்க முடிந்த குறிக்கோள்களை வைப்பதும் மனநோயை சமாளிக்க எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
மனநோயால் வாடுகிறவர்களுக்கு உதவுவது
மனநோயால் கஷ்டப்படும் ஒருவருக்கு ஆதரவு கொடுக்கும்போது, அவர் ரொம்ப நன்றாக உணர்வார்.