“தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்”
இந்தப் பூமியில், நீதி புரட்டப்படுவதையும், அப்பாவி ஜனங்கள் அடக்கி ஒடுக்கப்படுவதையும் நம்மில் நிறைய பேர் பார்த்திருக்கிறோம். அநியாயமும் அக்கிரமமும் இல்லாத ஒரு காலம் என்றைக்காவது வருமா?
சங்கீதம் 37-ல், பைபிள் இதற்கான பதிலைக் கொடுக்கிறது; இன்று நமக்குத் தேவைப்படுகிற ஆலோசனைகளையும் கொடுக்கிறது. பின்வரும் முக்கியமான கேள்விகளுக்கு அது தரும் பதிலைத் தெரிந்துகொள்ளுங்கள்.
நாம் அடக்கி ஒடுக்கப்படும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும்?—வசனங்கள் 1, 2.
பொல்லாதவர்களுக்கு என்ன ஆகும்?—வசனம் 10.
நல்லவர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும்?—வசனங்கள் 11, 29.
நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்? —வசனம் 34.
‘யெகோவாமேல் நம்பிக்கையாக இருந்து, அவருடைய வழியில் நடக்கிறவர்களுக்கு’ ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை இந்த 37-ஆம் சங்கீதம் தெளிவாகக் காட்டுகிறது. யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு பைபிளைச் சொல்லிக்கொடுக்கவும், அந்த ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற நீங்களும் உங்கள் அன்பானவர்களும் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிக் கற்றுக்கொடுக்கவும் ஆவலோடு இருக்கிறார்கள்.