நீங்கள் படுகிற வேதனையைக் குறித்து கடவுள் எப்படி உணருகிறார்?
கடவுள் அதைப் பார்ப்பதும் இல்லை, அதைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.
பைபிள் என்ன சொல்கிறது?
கடவுள் பார்க்கிறார், கவலைப்படுகிறார்
‘பூமியில் வாழ்ந்த மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொண்டதை யெகோவா கவனித்தார். உள்ளத்தில் மிகவும் வேதனைப்பட்டார்.’—ஆதியாகமம் 6:5, 6.
கடவுள் எல்லா வேதனைகளுக்கும் முடிவுகட்டுவார்
“இன்னும் கொஞ்ச நேரம்தான், பொல்லாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அவர்கள் இருந்த இடத்தில் தேடினாலும் அவர்களைப் பார்க்க முடியாது. ஆனால், தாழ்மையானவர்கள் இந்தப் பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள். அவர்கள் அளவில்லாத சமாதானத்தையும், முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11.
கடவுள் உங்களுக்கு எதைக் கொடுக்க ஆசைப்படுகிறார்?
“யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் அழிந்துபோக வேண்டும் என்றல்ல, நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். உங்களுக்கு நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கவே ஆசைப்படுகிறேன். நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள். என்னிடம் வந்து வேண்டிக்கொள்வீர்கள். நான் அதைக் கேட்பேன்.’”—எரேமியா 29:11, 12.
“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.