Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிக்க டிப்ஸ்

படிக்க டிப்ஸ்​—⁠முக்கியக் குறிப்புகளை மறுபடியும் யோசியுங்கள்

படிக்க டிப்ஸ்​—⁠முக்கியக் குறிப்புகளை மறுபடியும் யோசியுங்கள்

படித்த விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கிறதா? நம் எல்லாருக்குமே அவ்வப்போது இப்படி இருந்திருக்கும். அப்படியென்றால், என்ன செய்யலாம்? முக்கியக் குறிப்புகளை மறுபடியும் யோசித்துப் பார்க்கலாம்!

படிக்கப் படிக்க, கொஞ்சம் நிறுத்தி முக்கியக் குறிப்புகளை யோசித்துப் பாருங்கள். அப்போஸ்தலன் பவுலும்கூட தான் எழுதிய கடிதத்தில், “இதுவரை சொன்ன விஷயங்களின் முக்கியக் குறிப்பு என்னவென்றால் . . .” என்று எழுதினார். (எபி. 8:1) இந்த வார்த்தைகள், முக்கியக் குறிப்புகளைப் புரிந்துகொள்ளவும் அவர் எழுதிய மற்ற விஷயங்களோடு அவை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கவும் உதவியது.

முக்கியக் குறிப்புகளை யோசித்துப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள்; ஒருவேளை, படித்து முடித்த பிறகு 10 நிமிஷம் ஒதுக்கலாம். உங்களுக்கு ஞாபகம் வரவில்லை என்றால், உபதலைப்புகளையும் பாராக்களின் முதல் வரிகளையும் படித்துப் பாருங்கள். புதிதாக ஏதாவது கற்றிருந்தால், அதை எப்படி மற்றவர்களுக்கு எளிமையாக விளக்கலாம் என்று யோசியுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, படித்தவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் முடியும், வாழ்க்கையில் பொருத்திப் பார்க்கவும் முடியும்.