Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தங்கத்தைவிட மதிப்புள்ள ஒன்றைத் தேடுங்கள்!

தங்கத்தைவிட மதிப்புள்ள ஒன்றைத் தேடுங்கள்!

நீங்கள் எப்போதாவது தங்கக்கட்டியைக் கண்டுபிடித்திருக்கிறீர்களா? மிக மிக குறைவான ஆட்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான ஆட்கள் தங்கத்தைவிட அதிக மதிப்புள்ள ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுதான் கடவுளிடமிருந்து வரும் ஞானம். இதைத் தங்கத்தால் வாங்க முடியாது என்று பைபிள் சொல்கிறது.—யோபு 28:12, 15.

பைபிளை ஆழமாகப் படிப்பவர்களைத் தங்கத்தைத் தேடிக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு ஒப்பிடலாம். பைபிளில் இருக்கும் விலைமதிக்க முடியாத ஞானத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும், அதற்கு விடாமுயற்சியும் அவசியம். இந்த விஷயத்தில், தங்கத்தைக் கண்டுபிடிக்க உதவும் மூன்று வழிகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

தங்கக்கட்டியைக் கண்டுபிடிக்கிறீர்கள்

நீங்கள் ஆற்றோரமாக நடந்துபோவதாகக் கற்பனை செய்து பாருங்கள். அங்கே மினுமினுக்கிற ஒரு சிறிய கல்லைப் பார்க்கிறீர்கள். குனிந்து பார்க்கும்போதுதான் அது தங்கக்கட்டி என்று உங்களுக்குத் தெரிகிறது. தீக்குச்சியின் முனையைவிட சின்னதாக இருந்தாலும் அது உயர்தரமான வைரத்தைவிட அபூர்வமானது. அதனால், இன்னும் நிறைய தங்கக்கட்டி கிடைக்குமா என்று சுற்றியும் தேடிப் பார்ப்பீர்கள்.

அதேபோல், சில காலத்துக்கு முன்பு யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் உங்கள் வீட்டுக்கு வந்து, பைபிளில் இருக்கும் நம்பிக்கையான செய்தியைப் பற்றி உங்களிடம் சொல்லியிருக்கலாம். அப்போது, நீங்கள் முதல்முதலில் கண்டுபிடித்த தங்கக்கட்டி உங்களுக்கு இன்னமும் ஞாபகம் இருக்கலாம். உதாரணத்துக்கு, கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை நீங்கள் முதல்முதலில் பைபிளில் பார்த்திருக்கலாம். (சங். 83:17) உங்களால் யெகோவாவின் நண்பராக முடியும் என்றும் கற்றுக்கொண்டிருக்கலாம். (யாக். 2:23) அப்போது, தங்கத்தைவிட விலைமதிக்க முடியாத ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்னும் நிறைய பைபிள் விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டிருப்பீர்கள்.

இன்னும் நிறைய கிடைக்கிறது

சிலசமயங்களில், ஆற்றுக்கால்களிலோ நதிகளிலோ தங்கத் துகள்கள் படிந்திருக்கலாம். தங்கத்தைத் தேடிப் போகிறவர்கள், சில மாதங்களிலேயே, பல கோடி மதிப்புள்ள தங்கத் துகள்களைக் கிலோ கணக்கில் கண்டுபிடித்துவிடலாம்.

நீங்கள் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்த சமயத்தில் எக்கச்சக்கமான தங்கத் துகள்களைக் கண்டுபிடித்தது போல் உணர்ந்திருப்பீர்கள். ஒவ்வொரு பைபிள் வசனத்தையும் ஆழமாக யோசித்துப் பார்த்தபோது உங்களுடைய அறிவு அதிகமாகியிருக்கும். அதோடு, ஆன்மீக ரீதியிலும் நீங்கள் செழிப்பாக ஆகியிருப்பீர்கள். விலைமதிக்க முடியாத அந்த பைபிள் உண்மைகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்த்தபோது, யெகோவாவிடம் எப்படி நெருங்கிப் போவது என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதோடு, முடிவில்லாத வாழ்க்கையை மனதில் வைத்து அவருடைய அன்பில் எப்படி நிலைத்திருக்கலாம் என்றும் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.—யாக். 4:8; யூ. 20, 21.

தங்கத்தைத் தேடிப் போகிறவர்கள் கடினமாக முயற்சி செய்வது போல, பைபிளில் இருக்கும் உண்மைகளைக் கண்டுபிடிக்க நீங்களும் கடினமாக முயற்சி செய்கிறீர்களா?

தங்கத் துகள்களைத் தேடிப் போகிறவர்களைப் போல் நீங்களும் பைபிளில் இருக்கும் விஷயங்களை இன்னும் ஆழமாகத் தேட ஆரம்பித்திருப்பீர்கள். பைபிளில் இருக்கும் அடிப்படை உண்மைகளைக் கற்றுக்கொண்ட பிறகு யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் முயற்சி செய்திருப்பீர்கள்.—மத். 28:19, 20.

தொடர்ந்து தேடிக்கொண்டே இருங்கள்

தங்கத்தைத் தேடிப் போகிறவர்கள், எரிமலைப் பாறைகளிலும் அதைச் சிறிய அளவில் கண்டுபிடிக்கலாம். இப்படிப்பட்ட பாறைகளின் சில பகுதிகளில், மற்ற உலோகங்களோடு தங்கம் அதிகளவில் கலந்திருக்கும். அதனால் அந்தப் பாறைகளை உடைத்துத் தங்கத்தை எடுப்பார்கள். மேலோட்டமாகப் பார்த்தால், அவற்றில் தங்கம் இருப்பதே கண்களுக்குத் தெரியாது. ஏனென்றால், உயர்தரமான உலோகக் கலவையில், 1 டன் பாறைக்கு சுமார் 10 கிராம் தங்கம்தான் கிடைக்கும்.

அதேபோல், “கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளை” கற்றுக்கொண்ட பிறகும் ஒருவர் அதிக முயற்சி எடுக்க வேண்டும். (எபி. 6:1, 2) பைபிள் படிப்பிலிருந்து புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் அன்றாட வாழ்க்கைக்குப் பிரயோஜனமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் ரொம்ப வருஷமாக பைபிளைப் படித்துக்கொண்டிருந்தாலும், அதிலிருந்து தொடர்ந்து நன்மையடைய வேறு என்ன செய்ய வேண்டும்?

கற்றுக்கொள்ள ஆர்வமாக இருங்கள். பைபிளில் இருக்கிற விஷயங்களுக்குக் கவனம் செலுத்துங்கள். தொடர்ந்து கடினமாக முயற்சி செய்யும்போது, கடவுள் தரும் ஞானத்தையும் வழிநடத்துதலையும் உங்களால் கண்டுபிடிக்க முடியும். (ரோ. 11:33) பைபிளைப் பற்றிய அறிவை அதிகமாக்குவதற்கு உங்களுடைய மொழியில் இருக்கும் ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்துங்கள். தேவையான வழிநடத்துதலுக்காகப் பொறுமையாக இருங்கள். பைபிள் சம்பந்தமாக உங்களுக்கு இருக்கும் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்கவும் பொறுமையாக இருங்கள். மற்றவர்களுக்கு ரொம்ப உதவியாகவும் உற்சாகமாகவும் இருந்த பைபிள் வசனங்களைப் பற்றியும் கட்டுரைகளைப் பற்றியும் அவர்களிடம் கேளுங்கள். பைபிளில் இருந்து நீங்கள் கற்றுக்கொண்ட புதுப்புது விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லுங்கள்.

அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே உங்களுடைய குறிக்கோளாக இருக்கக்கூடாது. ‘அறிவு தலைக்கனத்தை உண்டாக்கும்’ என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (1 கொ. 8:1) அதனால், எப்போதும் மனத்தாழ்மையாகவும் விசுவாசத்தில் உறுதியாகவும் இருக்க கடினமாக முயற்சி செய்யுங்கள். குடும்ப வழிபாட்டையும் தனிப்பட்ட பைபிள் படிப்பையும் தவறாமல் செய்யும்போது, உங்களால் யெகோவாவுடைய சட்டதிட்டங்களுக்கு ஏற்றபடி வாழ முடியும், மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடியும். மிக முக்கியமாக, தங்கத்தைவிட விலைமதிக்க முடியாத ஒன்றைக் கண்டுபிடித்த சந்தோஷமும் உங்களுக்குக் கிடைக்கும்.—நீதி. 3:13, 14.